பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 & லா. ச. ராமாமிர்தம்

விசாலிக்க வழி பிறக்கும். ஆரம்பத்திலேயே தர்க்கித்தால் புத்தி குயுக்தியில் முடிந்து, பிறவிப்பயன் எட்டிப் போய் விடும். ஸ்வய, உண்மையான விசாரணை ஆரம்பமாகையில் உனக்கே அடையாளம் தெரியும். ஆகவே இப்போது நான் சொல்வதைப் பின்பற்றிச் சொல்வாயாக. மாதுர் தேவோ

பவ: பிதுர்த் தேவோ பவ: குருதேவோ பவ:”

பையன் கீழ்ப்படிந்தான். ஆனால் அவன் முழுத்ருப்தி

யக்ளுதேவர் நெற்றி வேர்வையை ஒற்றிக் கொண்டார்.


“குமாரா: ஆசிரமத்து எல்லை தாண்டி இங்கெல்லாம் துணையில்லாமல் வரலாகாது என்று நான் எச்சரித்தும் நீ இப்படித் தனியாக வருவது முறையாகாது. ஏன் வ்ந்தாய்?”

“நீ வருவாயோ என்கிற ஏக்கம்தான்.” “எனக்குச் சொல்லி அனுப்பித்தால் வரமாட்டேனா?” “சொல்லி அனுப்ப எனக்கு யார் இருக்கிறார்கள்?” “உன் குருநாதர் நீ நினைக்கற மாதிரி கருணை இல்லாத வர் அன்று. ரொம்ப இரக்கமும் அனுசரணையும் உள்ளவர்.” “என்னைச் சொல்லிவிட்டு நீ மாத்திரம் உன் இஷ்டத் துக்கு இங்கு நடமாடலாமோ?”

“குமாரா! இதை நன்கு புரிந்துகொள். நீ மனிதப் பிறவி, உலகத்துக்கு உன் பங்கு உபயோகமாயிருக்கப் பிறந்திருக் கிறாய். அதன் முறை தெரிந்து கொள்ளவே குருகுல வாசத் துக்கு வந்திருக்கிறாய். நாங்கள் அப்படியல்ல. மரணம் எப்போதும் எங்கள் நெருங்கிய உறவு. அதன் மையத்தில் தான் எப்பவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் விடும் மூச்சே, எங்கள் பிழைப்பே அப்படித்தான். எந்த சமயம் வேடன் அம்புக்கு இலக்காவோமோ, எந்த