பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 & லா. ச. ராமாமிர்தம்

விட்டாய். உருவம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்க முடியாதா?’ தி.ஜ.ரவிடம் லேசான நக்கல் உண்டு. அவருடைய விமர்சனம் மிக்க நுட்பமாகத்தானிருக்கும்.

  யார் என்ன வேனுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும். போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற் றட்டும். என் எழுத்து எவ்வழி அவ்வழி தான் என் வழி (ரஜினி டயலாக் மாதிரி இல்லை?) நான் யாருக்காவும் எழுத வில்லை. எனக்காகவே எழுதிக் கொள்கிறேன் என்று என் பக்கங்களில், பேட்டிகளில் பன்முறை தெரிவித்திருக்கிறேன். ஆனால் நான் அர்ப்பணித்துக் கொண்ட எழுத்தாளன் அல்ல. ஆனால் எதைச் செய்தாலும் நன்றாகச் செய்ய வேண்டும் எனும் ஆர்வமும் அதற்குரிய உழைப்பும் என் இயல்பிலேயே உண்டு. எழுத்தின் வெற்றிக்கு femingway மூன்று கட்டாயங்கள் விதிக்கிறான்.

“a bit of inspiration

lot of hard work a bit of luck.”

இருபது வருடங்கள் கெட்டவனுமில்லை; இருபது வருடங்கள் வாழ்ந்தவனுமில்லை. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் “தருண்யை நம” என்று ஒரு நாமாவளி வருகிறது. யானைக்கு முன் மணியோசை போல, சில கதைகள் வெளியான பிறகு கலைமகளில், “யோகம்”, “ஜனனி”, “பிரளயம்” அடுத்தடுத்து வெளிப் பட்டதும் (வாசகர்களும், விமர்சகர்களும் வெடுக்கென நிமிர்ந்து உட்கார்ந்ததும் லா.ச.ராவுக்கு எழுத்துலகில் தனிப் பிறை கிடைச்சாச்சு.