பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் : 261

டேய் முருவா என்னடா பண்றே? ஐயர் வீட்டுக்கு புதுப்பச்சரிசியும், பொங்கப்பானையும் அனுப்பிச்சாமா? கீரைத்தண்டு, அவரைக்காய் புத்தம்புதுசா, அங்கே தானேடா பொங்கலுக்கு எல்லாம் மொதல்லே போவனும்? இந்தத் தடவை தண்டு தொடை தடுமனுக்கு வந்திருக்குது. துவரை நம்ம வயல் வரப்புலே முளைச்சுதுன்னு சொல்லு-”

கள்ளம் கபடு அற்ற மக்கள். உழைப்பைத் தவிர வேறு நேரம் அறியாதவர்கள். மத்தியானம் மாவு சோறும் பழையதும். இரவுதான் ரஜமும் எள்ளுத் துவையலும். அம்மா அவர்களுக்கு ஏதேனும் கொடுத்தால், பெண் முன்றானையில், ஆண் மேல் சவுக்கத்தில் ஏந்திக் கொள்

{3} ffTT. -

சாயந்தரம் ஞானமணி சாமியார் கோவிலில் விளக்கு வைக்க எண்ணை ஏந்திப் போவார்.

அவங்க அவங்களுக்கு அவங்க காரியம்னும் வகுக் காமலே வகுப்பட்டுத் தாமாகவே சக்கரங்கள் ஒழுங்காய் உருண்டு போகும்.

காசு காண அரிது. வண்ணான், நாவிதன், உழுவோன், தொழில்காரர் யாவருக்கும் களத்து மேட்டில் வருடாவருடம் அளக்கும் நெல்தான் கூலி.

ஆனால் எல்லோருக்கும் போதுமளவுக்குப் பூமாதேவி வளமாய்க் கொடுத்துக் கொண்டுதானேயிருந்தாள்!

சில்லரை, பையன் என் கண்ணுக்கே தெரிந்ததே!

}; அப்பாவுக்கு மருந்திலிருந்து மந்திராலோசனைக்கு அமமாதான.

எதையேனும் கொத்திக் கிளறி நட்டுத் தண்ணிர் பாய்ச்சி,