பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 : லா. ச. ராமாமிர்தம்

என் பையல் பருவம் காஞ்சிபுரத்தருகே அய்யன் பேட்டை என்கிற கிராமத்தில் கழிந்தது. ஆசையுடன் என் நினைப்பில் அதைக் காப்பாற்றி வைத்திருக்கும் கஸ்தூரிப் பெட்டி.

அங்கு என் தகப்பனார் இருபது வருடங்களுக்கு மேல் பள்ளிக்கூட ஹெட்மாஸ்டர். கடைசிப் பத்து வருடங்கள் போஸ்ட் மாஸ்டரும் கூட ஆகையால் ஏகப்பட்ட மரியாதை ஆனால் அம்மாமேல் தான் அவர்களுக்குப் பக்தி, பிரியம் எல்லாம். ஊருக்கே மகாலச்சுமி வந்திருக்காங்க. இவங்க வந்ததிலிருந்து நம்ம பேட்டைக்கே களை கட்டிப் போச்சு, என்ன மனசு! அவங்க எண்ணம் போலவே அவங்க குடும்பமும் நல்லாயிருக்கணும்.”

:k :k

“போணிக்கு உங்கிட்டத்தான் வந்திருக்கேன். என்ன வாங்கிட்டியா? அதனாலென்ன கூடையை சும்மாத் தொடு போதும். கூடையைக் காலியாத் தலையில் மாட்டிக்கிட்டு சோத்து வேளைக்கு வீட்டுக்குப் போயிருப்பேன். நான் போய்த்தான் சோத்துப்பானையை அடுப்பிலே ஏத்தணும். என்னவோ இன்னி நிலைமை அப்பிடி, மருமவ இந்தத் தடவை ரொம்பத் தள்ளாமையாயிட்டா. அதென்ன அஞ்சாந் தடவை வாங்கிட்டத்துக்கே அப்பிடி? நானு, என் மாமியார் பன்னென்டு, பதினாறுன்னு பெக்கல்லே! எல்லாரும் காத்திரமாத்தானே இருக்காங்க?”

“நாளைக்கு நீ அழைச்சுண்டு வா. நான் பார்த்து என்னன்னு சொல்றேன்.”

“ஆமாம்மா, நீ சொல்றதுதான் ரோசனை: எனக்கு ஏன் தோணல்லே? நீ எங்க படி மிதிச்சாலே பத்தாதா? ஒரு தடவை அதன் வவுத்தை தடவினேன்னா, உசிருக்கு உசிர் வந்துடும். ※

※ :