பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ❖ லா. ச. ராமாமிர்தம்

பேட்டின்னா தெரியுமா? தெரியாட்டி பரவாயில்லே. இப்ப
உனக்குத் தெரிஞ்சுதான் என்ன ஆவணும்?”

சிரித்தாள்.

“நிறையப் படிச்சுட்டு வேலை கிடைக்காமே ஒரு
வருசமா உள்ளேயே குமுங்கிட்டிருக்கான். அவன் கஷ்டம்
அவனை நேரிடையா நான் கேட்டுக்க முடியாது. ஆண்ட
வனே, நான் இப்போ போற ராசி, அவனுக்கு விடியணும்.”

“கடைசி பையனுக்கு இன்னிக்கு முடிவுப் பரீஷை.
என்னாலே நின்னுட்டான்னா, ஒரு வருஷம் வீணாப்
போயிடும். செத்தும் கெடுத்தான்னு பேரிருக்கக் கூடாதம்மா.
இதெல்லாம் உன்கிட்டே ஏன் சொல்லிக்கறேன்னு எனக்கே
தெரியல்லே. போறப்போ எங்கானும் சுமையிறக்கிட்டுப்
போவணுங்கறாங்களே, அதுதானோ என்னவோ?”

“இந்த சமயத்துலே உங்களுக்குச் சிரிக்கத் தோணுதே,
எப்பிடி ஐயா? இப்போ வீட்டிலே அம்மா இருப்பாங்களே,
அவங்க மனசு என்ன பாடுபடும்?”

“அவளும் இப்போ இங்கே இல்லை. வேடிக்கையா
யில்லே? அவளுக்கு இன்னும் பிறந்த வீட்டு மவுசு இருக்கு.
உடன் பிறந்தாமாருங்க தாங்கறாங்க இருக்க வேண்டியது
தானே! நேற்று ராத்திரிதான் பெங்களூருக்கு ரயிலேறிப்
போனா. இருக்க வேண்டியதுதானே! எப்பவுமா போறா,
என்னிக்கோ ஒரு நாள் அவள் வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு
வந்திருப்பாங்க கார் வெச்சிருக்காங்க. ஹூம் அந்த சைடுலே
யும் ஒண்ணும் குறைச்சலில்லே” பெமூச்செறிந்தார்.

அதுவரை லேசாய் மப்பாயிருந்த வேளையில், வெய்>br> யிலும் வெளிச்சமும் வந்து புகுந்து லேசாய் சூடும் கண்டது.
இலைகளின் சந்து வழி சூரியனின் கதிர் லேசாய்க் கண்
கூசிற்று.