பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அலைகள் ஒய்வதில்லை ❖ 51


“ஏன் இப்படிப் படபடக்கிறாய்?”

“நேற்று நீங்கள் என் கையைப் பிடித்தீர்கள்.”

“பிடித்தேனா? எனக்கு ஞாபகமில்லை. சரி. பிடித்தேன்.
அதனாலென்ன?”

“எனக்குப் பிடிக்கவில்லை.”

அவருக்குத் திடீரென்று ஞாபகத்தில் கருவிழிகள்
விரிந்தன. விழுந்து விழுந்து சிரித்தார்.

“ஒஹோ. அப்படியா கதை!”
அவள் சிணுங்கினாள்.

“எனக்கு இப்போதெல்லாம் அதெல்லாம் பிடிப்ப
தில்லை. குழந்தைகள் பெத்தாச்சு. வளந்தாச்சு. அவாளும்
பெரியவாளாகி தனித்தனி மரங்களாக ஊணியாச்சு. இனி
என்ன வேண்டிக்கிடக்கு?”

அவர் யோசனையாய் “ஆமாம். நீ ஏற்கெனவே சொல்லி
யிருக்கிறாய். ஆனால் கோமதி யோசித்துப்பார். நீ ரிஷி
பஞ்சமி முழிக்காவிட்டாலும் அந்த விரதம் தாண்டிய வயது
அடைஞ்சாச்சு. நானும் சின்ன வயசில்லே. இனி நம்மிடை
யில் என்ன எதிர்பார்க்கிறேனாம்?”

“அப்படிச் சொல்லாதீர்கள். டாக்டர் மதுரம் சொன்
னாள். மூணு நாளைக்கு முன்னால் B.P. பார்க்கப் போன
போது “உடம்பைப் பார்த்துக்கோங்கம்மா. அவரைப்
பக்கத்தில் அணுகவிடாதீர்கள்-” எங்களுக்கெல்லாம்
வயசாச்சும்மா-நீங்கள் சொன்னதைத்தான் நான் சொன்
னேன்-ஆண்களை எத்தனை வயசானாலும் நம்ப
முடியாது-”

“டாக்டர் மதுரம் என் பெண்ணாயிருக்கலாம். ஏன்
பேத்தியாகக் கூட இருக்கலாம்.”