பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ❖ லா. ச. ராமாமிர்தம்

“ஆனால் அவ டாக்டராச்சே”

இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு
பூவரச மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நான் ஏன் உன் கையைப் பிடித்தேன் தெரியுமா?”

“எனக்கெப்படித் தெரியும்?”

“நேற்று இரவு நீ மிளகுக் குழம்பு செய்திருந்தாய்.
மேஜையில் வாழை இலையில் குவிந்த சாதத்தில் ஆவி
பறக்க கமாளித்தது. அதைத் தொடுவதற்கு என் கை கூசிற்று.
அப்படி ஒரு கொதி சூடு. என் திண்டாட்டத்தைக் கண்டு நீ
என் கையை உதறிவிட்டு சாதத்தைப் பரக்கப் பரக்கப்
பிசைந்தாய்.”

“ஏனெனில் அதை அப்படி சாப்பிட்டால்தான்
வயிற்றில் கவ்வும்.”

“உன் கை பொரிந்து போய்விட்டது. பார்க்க கஷ்டமர்
யிருந்தது. கையைப் பிடித்தேன். எனக்காகத்தானே. சின்ன
வயசில் அம்மா எனக்குப் பிசைந்திருக்கலாம். ஆனால்
இப்போ இல்லை. உன் கையைப் பிடித்த மாதிரி அவள்
கையைப் பிடித்திருக்கத் தோன்றியிருக்காது. என்னமோ
தோணித்து பிடித்தேன். நன்றியா? அன்பா? விசுவாசமா?
என்னத்தை அறிவேன்?”

“ஆமாம். எங்களுக்குக் கை பொரியறது பெரிசா?
எத்தனை தடவை குக்கரில் சுட்டுக் கொண்டிருப்போம்.
தோசைக்கல்லில். காய்ச்சின பாலில். இதை எல்லாம்
யோசிக்கக் கூட நேரம் கிடையாது. பொம்மனாட்டிப் பிழைப்
பென்றால் லேசா?”

“அதில்லை கோமதி. தாய் மாதிரி பிசைஞ்சயே? இந்த
வயசில் யார் பிசையறா? தாய்க்குப் பின் தாரம்ங்கற