பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அலைகள் ஒய்வதில்லை ❖ 53


பழமொழி சும்மாவா? ஐ லவ் யூ கோமதி.” ஒரு கேவல்
அவரிடமிருந்து புறப்பட்டது.

“ஒ. அப்படியா விஷயம். தப்புப் பண்ணிட்டேன்.”

“எல்லாப் பெண்களும் எப்படியோ அடிமனசில்
விவஸ்தை கெட்டவர்கள். தப்புப் பண்ணிட்டேன்னா.”

அவள் கை அவர் மேல் பொத்திற்று.

“நீ என்னைத் தொடுகிறாய் கோமதி.”

“உங்களைத் தொடணும்ன்னா. ஒரு கனம் தீர்ந்தது.
ரொம்ப நாழியாயிடுத்தே ரசிக்கலையா? சாப்பிட
வேண்டாமா? ஹோட்டலுக்குப் போவோமா? த்ரீ ஸ்டார்.
ஆட்டோ பிடிச்சா போச்சு.”

“இத்தனை நாழிக்கு மேலேயா? தனியாய்ப் போவது
உசித்தமில்லை. ஹோட்டல் கூட மூடியிருக்கும்.”

“போனாப் போவட்டும். நானே சமைச்சுட்டா போச்சு.
குக்கர்ல சாதம் வேகறத்துக்குள்ள GHAT ஆ பெருங்காயமும்
மிளகும் போட்டு ரசம் நிமிஷமா காய்ஞ்சுடும்.
ஒரு பருப்புத் துவையலும் அரைச்சுட்டாப் போச்சு.”

நைட் வாட்ச்மேன் கம்பிகளைத் தட்டிக் கொண்டு
அவனுடைய அடுத்த சுற்றில் வருகையில் அங்கு ஒருவரு
மில்லை. வீடு தாளிட்டிருந்தது.