பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஸ்ருதி பேதம் ❖ 59


“எனக்கென்ன objection? நடந்ததைச் சொல்லப்
போறேன். சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் நடக்கல்லே.
சாதத்தை வடிச்சுட்டு, ‘இன்னிக்குக் கொஞ்சம் சுருக்கப்
போறேன். நாளைக்கு காலையிலே வந்து பத்துத் தேச்சுக்
கறேன் குழந்தைக்கு ஜூரம்’னேன்.”

“‘குழந்தைக்கு ஜூரம்னு ஏன் முன்னாலேயே சொல்
லல்லே? அப்பவே போயிருக்கலாமில்லே’ன்னு இரைஞ்சார்.
‘இல்லே வராமலே இருந்திருக்கலாம். அனேகமா ராத்ரி
மோருஞ்சாதம் தானே! இல்லாட்டி bread இருக்கு சமாளிச்
சுக்கறேன். இல்லே ஒரு ரா பட்டினி கிடந்தால் ஆகாதா?
டாக்டரிடம் காண்பிச்சையா? இன்னும் இல்லையா? உடனே
போய்க் காண்பி. பணம் இல்லையா? இந்த அம்பது ரூபா
வெச்சுக்கோ. இது கடனா? ஒசியான்னு பின்னாலே முடிவு
பண்ணலாம். முன்னாலே போ’ உடனே வந்துட்டேன்
நடந்தது இதுதான்.”

“அவருக்கு உற்றார் உறவினர் இருக்காங்களாா?”

“பிள்ளைங்க இருக்கறதா ஒருதடவை பேச்சுவாக்கிலே
சொன்னார். ஆனால் எத்தனை பேர், எங்கேயிருக்காங்கன்னு
சொல்லல்லே.”

“தபால் கிபால்?”

“அப்படி வரமாதிரியும் தெரியல்லே. ஆனால் இதுக்கு
என் வார்த்தை கெட்டியில்லை. இங்கே நான் தினம் வேலை
செய்யற நேரம் காலை 8 to 10. சாயந்திரம் 7 to 8. இடையில்
நடப்பது எனக்குத் தெரியாது.”

ஆழ்ந்த யோசனையில் அவன் வாய் முறுக்கிக்
கொண்டது. “எனக்கு இப்போ தோணினது இவ்வளவுதான்.
நான் வரேன். பின்னாலே உங்களுக்கு ஏதாச்சும் தோணித்
துன்னா சொல்லியனுப்புங்க. No. 285”