பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ❖ லா. ச. ராமாமிர்தம்

அவன் சென்றபின் கதவைத் தாளிட்டுக்கொண்டு
சிந்தனையில் உள்ளே நடந்தாள்.

நேற்று நடந்தது அதுதானா? தன்னை மாய்த்துக்
கொள்ளும்படி என்ன ஆயிடுத்து? ஏதோ குற்ற உணர்வு
அவளை உறுத்திற்று. இப்போ மட்டுமல்ல. இனி அப்பப்போ
நினைப்பு வரும்போதெல்லாம் உறுத்திக்கொண்டிருக்கும்.
ஐயோ பாவம்! நல்ல மனுஷன்.

ஆகமிச்சம். நாலு மாதத்தோடு பிழைப்பு போச்சா?

ஒருநாள் பிற்பகல்.

அவனுடைய புதிய சட்டை நிஜாரில் பையன் கையைப்
பிடித்துக்கொண்டு முதன்முதலாக அவர் எதிரே நின்ற
போது, அவர் அவளைக் கவனிக்கவில்லை. சாய்வு நாற்காலி
யில் அமர்ந்து என்னவோ எழுதுவதில் முழுக் கவனமும்
முனைந்திருந்தது.

சற்று பொறுத்து, “மாமா!”வென்று மெதுவாய் அவள்
அழைத்ததும், திடுக்கிட்டு நிமிர்ந்தவர், சற்றுநேரம்
தன்னையே இழந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்த
கண்களில் ஒரு திகைப்பு.

“உன் பேர் என்ன அம்மா?”

“பத்மாவதி. பத்மா.”

“என்ன வேண்டும்?”

“சமையலுக்கு ஆள் தேவைப்படுவதாகச் சொல்லக்
கேட்டு வந்தேன்.”

“ஓ!” அப்பத்தான் அவருக்கு நினைப்பு வந்தது.
பேனாவை மூடிப் பக்கத்தில் ஜன்னல் விளிம்பில் வைத்தார்.

“நன்னா சமைப்பையா?”