பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஸ்ருதி பேதம் ❖ 67


அப்படியும் பரிவு சுரந்தது. பெண் ஜென்மத்துக்கே
இயல்பான தாய்மை.

ஒருநாள் சமைக்க வந்தபின் (அபூர்வமாய்) அவர்
ஸ்னானத்துக்குப் போயிருந்த சமயத்தில் ஜன்னல் விளிம்பில்
அவர் வைத்துவிட்டுப் போயிருந்த அட்டையை (pad)
எடுத்துப் பார்த்தாள். என்னதான் எழுதறார்? தான் செய்யும்
தவறு அவளுக்குப் புரியவில்லையா? ஆயினும் ஆவலை
அடக்க முடியவில்லை. நேரும் போதெல்லாம் நேரங்களைத்
திருடிப் படித்தாள்-முத்துப் போன்ற அவ்வெழுத்துக்களே
ஈர்ததன.

தனித் தனித் தாள்கள்.

கடிதங்களாக அமையவில்லை. நாவலோ கதையோ
கட்டுரையுமில்லை.

ஒன்றுக்கொன்று கோர்வையற்று, சமயங்களில்
முரணாய், அந்தந்த சமயத்துக்குத் தோன்றியபடி எண்ணங்
கள், அவைகளை முழுக்கப் புரிந்து கொண்டாள் என்று
சொல்வதற்கில்லை. ஆனால் ஏதோ விதத்தில் அவை
நெகிழ்த்தின. தனியாக அவைகளில் கவிதையில்லை.

அவர் வரும் அரவத்தை மோப்பமாகவே உணர்ந்து
padஐத் திருப்பி வைத்துவிட்டு சமையலறைக்கு ஒடிப் போய்
காரியத்தை ஏற்படுத்திக் கொண்டு, தான் படித்ததன் புரியாத
சுவை அவளை ஆட்கொள்கையில் திக்குத் தெரியாத
காட்டினிலே எனும் சொற்றொடர், மார்க்குலையில் பிறந்து
அவளே அதன் கவிதை ஆகும் தருணம் அவளைத் தன்னுள்
இழுத்துக் கொண்டதும் இன்ப துக்கம் தொண்டையை
அடைத்தது.

இவரும் நானும் ஒரே ஒடம். துடுப்பில்லாத ஒடம்.
இல்லாவிட்டால் என்ன?