பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ❖ லா. ச. ராமாமிர்தம்

பாலா, மனோ ரஞ்சிதா-எது வேணுமானா
லும் இருந்துகொள்.

மனோ, இப்போது உன்னால் ஒன்று
புரிகிறது. மனித வாழ்வு முற்றிலும் வியர்த்த
மில்லை. அழகிய எண்ணங்களை எண்ணி
இங்கு விட்டுச்செல்ல வந்திருக்கிறோம்.
அவை பூத்ததற்கு ஏற்றவாறு மணங்கமழ்ந்து
கொண்டிருக்கும், பூ வாடி வதங்கி உதிர்ந்து
விட்டாலும் மணம் மட்டும் கொஞ்ச காலம்
தங்கி நீடிக்கும். அழகிய எண்ணங்கள்
வாழ்வின் நிர்மால்யம் இதற்கு நீ லாயக்
கில்லையானால் உன் நரகத்தில் வீழ்ந்து
நாசமாப்போ. மனோ, இதுதானே உன்
தீர்ப்பு?

மனோ, நீ அழகா இல்லையா என்று
எனக்குத் தெரிய அன்று நேரமில்லே.
ஆனால் நீ அழகிய எண்ணம், அதை
வைத்துக் கொண்டு ஒவ்வொரு கல்லாய்க்
கட்டடம் எழுப்புகிறேன்.

மனோ, எனக்கு உன்மேல் நிச்சயமாய்க்
காதல் இல்லை, அறி...ஆனால் அன்று
கோலத்தின் நடுவே நின்றபடி அந்த
poseஇல், நீ உன் யெளவ்வனத்தில் என்
நினைவில் அப்படியே உறைந்து போனாய்.
நான் நாளுக்கு நாள் வயதாகி உன் நிர்
மாலியமாகிக் கொண்டிருக்கிறேன். இது
என்ன நியாயம். என்ன பயன். உனக்குத்
தான் வெளிச்சம். உனக்குச் சித்து விளை