பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஸ்ருதி பேதம் ❖ 77

யாட்டு, எனக்குச் சித்ரவதை. The world
belongs to Youth.

இன்னமும் என்னென்னவோ எவ்வளவோ எழுதி
யிருந்தார். ஆனால் அவைகளை விழுங்க நேரமுமில்லை.
சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை. ஆனால் தன்னால் படிக்க
முடிந்ததைப் படித்தவரை நினைவிலேயே மாற்றி மாற்றி
அடுக்கி ஒருவாறு தனக்குத் தோன்றியபடி கோர்வைப்
படுத்துவதே ஒரு adventure ஆக இருந்தது. அப்படிச் செய்து
அது கொண்டு வந்து விட்ட முடிவுக்கு வந்து அடங்கியதும்
பூமியின் ரேகை ஒன்றைத் துருவத்துக்குத் துருவம் முழுக்கப்
பிரயாணம் வந்தாற்போல் ஒரு அமைதி கண்டாள்.
இப்போது அவள் கணவன் மீதுகூடக் கசப்பு தெரிய
வில்லை. அவரவர் வந்த வழி இதுதான் பூமியின் இசை.

இந்த நிச்சயம் நீடிக்காது. தெரியும். ஆனால் கிடைத்தது
கிடைத்தவரை. இதுவும் வாழ்க்கைத் தத்துவத்தைச் சேர்ந்தது
தான்.

அடுத்த நாள் வேலைக்குப் போனபோது அவர் எதிரே
கணிசமாக ஒரு காயிதக் குவியல் இருந்தது. கூடவே
நெருப்புச் சட்டி. ஒவ்வொரு தாளாய்த் தீக்குக் கொடுத்துக்
கொண்டிருந்தார். பொசுங்கல் நெடியில் அவளுக்குக்
கமிறிற்று.

“என்ன இது. உங்கள் எழுத்துப்போல் இருக்கே!”

அவர் பதில் பேசவில்லை. அவர் முகம் அழுது
தெளிந்தாற்போல், மாரிக்காலத்து மதியெனச் சோபை
இழந்து...

“ஏன் எரிக்கிறீர்கள்?”

“ஆம், எதனால்தான் என்ன பயன்?”

அவளுக்குப் பகீரென்றது.