பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாப்பூ ❖ 81


இப்போது சந்தேகமேயில்லை. ஆனால் யார் எழுந்
திருப்பது?

எழுந்து போய் வாசற்கதவைத் திறந்தாள்.

வாசலுக்கெதிரே கம்ப விளக்கு வழக்கம் போல்
‘அவுட்’. நிழலினிருட்டில் உருவக்கோடு பலவீனமாய்த்
தெரிந்தது.

“ஸ்வேதாரண்யம் வீடு இதுதானா?” பலஹினம்.
ஆனால் மெருகிட்ட உச்சரிப்பு.

“ஆமாம். நீங்கள் யார் என்று சொல்ல?”

“நான் நான்-ஸ்வேதா இருக்கானா?”

“இருக்கார். உள்ளே வாங்கோ.”
<br. ஆள் உள் வெளிச்சத்துக்கு வந்து விட்டான். சற்று
உயரமாய், மெலிந்த உருவம். க்ஷவரம் செய்யாமல், மயிர்
முட்கள் முகத்தில் ஒழுங்கிலாது படர்ந்திருந்தன. என்ன
அகலம் நெற்றி! அவள் வியக்கும் வண்ணம், அதன்
வரைகோடு பெருந்தன்மையில் உயர்ந்து மேலே அடர்ந்த
சுருள் காட்டுக்கு வரை கட்டிற்று. பல நாள் சீவாது சிக்குப்
பிடித்த சிகை. ஆடையும் அழுக்காய், கசங்கி அசிரத்தை
காட்டிற்று. குளிச்சு எத்தனை நாளாச்சோ, ஸ்வேதாவின்
பேரைச் சொல்லிக் கொண்டு கெளரவப் பிச்சையோ?
இதற்குள் ஸ்வேதா வந்து விட்டான். வந்தவனைப் பார்த்துச்
சற்றுநேரம் திகைத்து நின்றான்.

“யாரு?”

வந்தவன் பேசவில்லை. அந்த விழிகளில் மங்கிய தணல்
கங்கிற்று. ஸ்வேதாவின் உள்ளே பாம்பின் வால் சுழல்வது
போல் கிளர்ந்தது.

“நீங்கள்-நீங்கள்-நீ-நீ வ்யாஸ் இல்லையோ? யெஸ்,