பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அலை தந்த ஆறுதல்

சிட்டெடுத்தால் சோதிடக்காரன் கிளிக்கு ஒரு நெல் கொடுப்பான். ஆனால் செய்த செயல் எதையும், தந்தை பாராட்டியதே இல்லை...ஆனால் உள்ளத்தில் அன்பு இருக்கும்...சில நாட்களுக்கு பிறகு என்னை ஆரத்தழுவிக் கொண்டார். ஏதோ கோபத்தில் ஒருவரைக்கண்ட படித்திட்டி எழுதிவிட்டேன்..பிறகுதான் தெரிந்தது தவறு என்று...நல்லவேளை எழுத்துக்கள் தண்ணிர்ப்பட்டு அழிந்து போச்சுதுன்னு எழுதியிருக்கார். நான் பொழச்சேன்’ என்றார். நான்மழையை நினைத்துக்கொண்டேன் அதற்காக நன்றிக் கவிதைகூடப் பாடியிருக்கிறேன்.

மனப்பக்குவம் வரப்பெறாத நிலையில் இளங்கன்று பயமறியாது’ என்பதற்கிணங்க என்னோடு உடன் பயிலும் தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை மாணவ நண்பன் ஒருவனுக்கு உதவித்தொகை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு கல்வி நிலையப் பொறுப்பாளரின் விட்டிற்குச் சென்றேன்.

மலைபடுகடாம் என்ற இலக்கியத்தின் தலைவன் வீட்டிற்குப் போகும் வழி எவ்வளவு அரிதோ, அதைவிட அரிது அவர் முகவரியைக்கொண்டு அவர் வீட்டைக் காண்பது..ஃபிளாஷ் போட்டோ எடுக்கும் புகைப்படக்காரரின் காமிராவைப்போல் மின்னல் பளிச்சிட்டது. பயிற்சியில்லாத பக்கத்து வீட்டுக்காரரின் மிருதங்க வாசிப்பைப்போல இடி கடுமையாக இடித்தது. 70 எம்.எம் சினிமாவில் பெய்யும் மழையைப்போல் அப்படியே மழை பெய்தது...ஒருவேறுபாடு...மழை திரையில் பெய்வதாகத் தெரிந்தாலும் திரையில் ஈரம் இருக்காது...ஆனால் இந்த அசல் மழை எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லார் மீதும் பெய்தது.