பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அலை தந்த ஆறுதல்

மழை எனக்கு உதவிய மாண்பை நினைத்து நினைத்து வியக்காமல் இருக்க முடியாது. என் வீட்டுப்பக்கமோ, பள்ளிப்பக்கமோ ஒரு துாறல் கூட இல்லை. எனக்காகவே அவர் வீட்டுப் பக்கம் பெய்தது போல் இருந்தது. அலுவலகத்தத்துவம் புரிந்தது.

இத்தகைய அருளுள்ளம் கொண்ட மழையைப் போய், பேய் மழை என்று சொல்கிறார்களே என்பதற்காக நான் வருத்தப்பட்டதுண்டு,

என்னைப் பொறுத்தவரையில் மழை ஒரு குழந்தை தான்! இன்னும் சொல்லப்போனால் எடுப்பார் கைப்பிள்ளை. இல்லையென்றால் மனிதனைப்போலச் சார்ந்ததன் வண்ணமாகுமா? சுற்றினமாகிய சாக்கடையுடன் சேர்ந்து நலிகிறது. புனிதமான காவிரியில் பெய்கின்றபோது அதற்கு இளமையையும் அழகையும் ஊட்டுவதோடு தானும் பெருமை பெறுகின்றது. அது மட்டுமா? “விண்ணையும் மண்ணையும் இணைக்கும் நீர்க்கம்பி” என்று சொன்னார் என் புதுக்கவிதை நண்பர். யாராவது திருடிக்கொண்டு போய்விடப்போகிறார்கள்?” என்றேன். “இல்லை அது ஒரு பொதுவுடைமைக்கம்பி! எவரும் நுகரலாமேயன்றி உரிமைகொண்டாட இயலாது; அதற்கு இடமும் தராது’ என்றார். ‘கவியே! நீ வாழ்க!” என்றேன்.

சுண்ணாம்புச் சுவர்களில்கூடப் பாசம் பெருக்கும் இந்த மழையை! ஒரு காப்பியக் கவிஞன் ‘மாமழை” என்றானே! அவன் பெருமையே பெருமை! கலையென்ற பெயரில் கறுப்புக் காட்சிகளை வெண்மையாக்கும் காகிதப் புலிக் காட்சிகளை வெண்மையாக்கும் காகிதப்புலிக்கயவர் சிலர் விலைப்டைப்பு விளம்பரச் சுவரொட்டிகளைக்