பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அலை தந்த ஆறுதல்

ஒய்வெடுக்கும் வாலிப வாழைத்தண்டுகள்...கோஸ் மலைகள்...வெளியே முட்களைத் தாக்கிய பலாப் பிஞ்சுகள்...சுவரில் காலண்டர் மற்றும் பத்திரிகைகளிலிருந்து கத்தரித்து ஒட்டப்பட்ட சினிமாப் படங்கள், சாமி படங்கள்...இப்படிப்பட்ட சூழலில்தான் விவேக வீராசாமி என்று அழைக்கப்படும் அந்த வீரர் தென்பட்டார். முகத்தில் தெளிவு இருந்தது.

முதலாளி முகுந்தன் அந்தத் தேனிக்கு முழுச் சுதந்திரமும் கொடுத்திருந்தார். அவர் ஒரு கிளவர் காபிடலிஸ்ட். மார்க்கெட் சாமான்கள் வாங்கும் முழுப் பொறுப்பு இந்த மைசூர்ப்பாகு இதய மனிதனைச் சார்ந்ததுதான்! வீட்டை மறந்த துறந்த வாழ்வைத் தொடங்காத வாடிக்கையாளர்களின் பண்டிகை நாட்கள், கோயில் திருவிழாக்கள், அரசியல் மாநாடுகள். ஆகியவற்றிற்கேற்ப மெனுக்களை மாற்றியும் திருத்தியும் அமைக்கின்ற முழு அதிகாரம் மாஸ்டருக்கு இருப்பது போல் இந்த மேதைக்கும் உண்டு. மோதியது இல்லை. ஆனால் முழித்தது இல்லை. தண்ணிரில் இருக்கும் மீனுக்குத் தாகம் தெரியாது என்பார்கள். அதுபோல லட்டுக்குரிய திராட்சையையும் முந்திரிப்பருப்யையும் சட்டினிக்குள்ள பொட்டுக்கடலையையும் தேங்காயையும் மிக்சருக்குள்ள மல்லாட்டையையும் பார்த்துப் பார்த்துச் சலித்தவராதலால் அவற்றையெல்லாம் மனத்தாலும் தொடாத மாவிரதன். சபலம் என்பதே சத்தேகத்துக்குக் கூடக் கிடையாது.

நான் உள்ளே நுழைந்தவுடன் அவர், ‘வெளியே போர்டைப் பாத்தீங்களா?” என்றார். முதலாளியின் அனுமதியோடு வந்திருப்பதற்கு அடையாளமாக டோக்கனைக் காண்பித்தேன். பஜ்ஜி வில்லையோடும்