உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. (நகர) ணகார, ணகார மயக்கம்

உறுப்பினர்கள்

15 வயது பையன்

26 வயதுக்காரர்

பேராசிரியர்

காட்சி-1

15 வயதுப் பையன் (சிரிக்கிறான்) ஹஹ்ஹ...ஹா!

25 வயதுக்காரர் : ஏய் அரப்படிச்ச மூஞ்சூறு என்னத்த

பார்த்து பிசாசாட்டுஞ் சிரிக்கிறே?

15 வயது : ஐயா எழுதினதப்பாத்து, சிரிக்காம அழவாச்

சொல்றீங்க!

25 வயது : அப்படி என்ன எழுதிப்புட்டோம்? அத தப்புன்னு சொல்ற அளவுக்கு ஒங்ககிட்டே என்ன மேதாவிலாசம் இருக்குது? கொஞ்சங்கூட மரியாத இல்லாம் ...... சே;சே!

15 வயது வயசாய்ப் போச்சுதுன்னா மரியாத கொடுக்க வேணும்! உண்மைதான்! ஒத்துக்கறேன்...ஆனாக்க வயசுக்காக மட்டும் மரியாத எதிர்பாக்றது சரி

யில்லே! வயசுக்குத் தகுந்த புத்தியும்கூட இருக் கனும்.