உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

அலை தந்த ஆறுதல்


பேரா இந்த அளவுக்கு உற்சாகம் இருந்தாக்க அதுவே

போதும்!

25 வயது : (15 வயதுப் பையனை நோக்கி) நல்வா கேட்டுக்க...மோட்டு வளையப் பாக்கற மாதிரி முளிக்காதே அப்புறம்...

15 வயது : (சற்று கிண்டலுடன்) சரீங்க...உத்தரவு!

பேரா : “நண்பன்'ங்கற வார்த்தை கேள்விப்பட்டிருக்

கீங்களா?

25 வயது : ஒஹோ! இந்த சினேகிதகாரன்னு சொல்ற மாதிரி வார்த்தைங்களா... டிராமா, சினிமால கூட வருமே...

15 வயது: ஐயா எனக்கும் தெரியுங்க... பேரா : இந்த வார்த்தைல மூணு வகை னா'வும் இருக்குது 25 வயது : அப்பிடிங்களா?

15 வயது : ஒரேடியா வாய பொளக்காதீங்க...விஷயத்த

கவனிங்க...

பேரா : ஒருத்தரை ஒருத்தர் கேலி பண்ணிகிட்டே இருக்கக்கூடாது.க வ ன ம க் கேக்கணும்... மொதல்ல சொன்னதை மனசுல வச்சுக்குங்க... இப்ப சில வார்த்தைங்க சொல்லப் போறேன்... கேளுங்க... எழுதியும் காட்றேன். (பொதுவாக) நண்டு, நஞ்சை, நடவு, நத்தை, மண்ணு. பொன்னு, கனவு, நனவு.

இருவர் : நண்டு, நஞ்சை, நடவு, நத்தை, மண்ணு

பொன்னு, கனவு, நனவு...