பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

அலை தந்த ஆறுதல்


செங் : ஆமாம்...கொஞ்ச காலத்துக்கு முன்னே அதப்பத்தி பிரமாதமாச் சொன்னாங்க...சும்மா சொல்ல லாமா! நல்ல வெளச்சல்,

பன் : அப்படிப்பட்ட அந்த ஜப்பான்ல படிக்காதவங்களே கெடையாது! அதனாலதான் அந்த நாடு எல்லா வகையிலேயும் முன்னேறியிருக்குது...

முத் : அதாவது படிப்புக்கும் வருமானத்துக்கும் கனக்ஷன்

இருக்குதுங்கிறீங்க! சரிதானுங்களா?

பன் : ஆமாங்க...சரியாச் சொல்லிப்புட்டீங்களே!

முத் : கேக்குறேனேன்னு கோவிக்கப்படாது......எத்தி னியோ மேல்நாடுங்கள்ள கூடத்தான் படிச்சவங்க நெறையபேர் இருக்காங்க...அங்கயும் கொலை, கொள்ளைன்னு கு த் தங் க இருக்கத்தானெ செய்யுது...

பன் : ரொம்ப நல்ல கேள்வி! படிப்புன்னாக்க எழுதப் படிக்கத் தெரியறது மட்டுமில்லே! அடுத்த வங்களுக்கு முடிஞ்ச வரைல நல்லது செய்யறது தான் படிப்போட நோக்கம்! நல்ல பாரம்பரியம் உள்ள நம்ப நாட்ல எல்லாரும் படிச்சவங்களா இருந்துப்புட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஆஸ்பத் திரிக்கும் வேலையே பெரும்பாலும் இருக்காது... எனக்கு இதுல முழு நம்பிக்கை இருக்குது...

செங் : சரிதாங்க தம்பி முந்சில்லாம் நாஞ் சொல்றதைத் தான் மத்தவங்க கேக்கணும்...கேக்குவீன்னா வாய்ல வந்தபடி திட்றதுன்னு செய்துகிட்டிருந்தேன். ஒரு வாட்டி நாட்டாமை கூட கண்டிச்சாரு ..எனக்கே தெரியுது...படிப்புக்கு ஒரு தனி மருவாதை இருக்கக் தான்.செய்யுது.