பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

89


தர் : ஆமாம்! ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு பிள்ளை யிடம் நிம்மதியா இருக்க ஆசைப்பட்டேன். ஆனால், முதல் மூன்று மருமகளுங்களிடத்திலே கிடைத்த பதில்?..

(காட்சி மாற்றம்-இசை)

பெண்-1 : நாங்க இந்த வருஷம் லீவு எடுத்துக்கிட்டு காஷ்மீர் போகனும், கெடுக்கிறதுக்கு நீங்க வந்து சேராதீங்க?

பெண்-2 : ஏன் ? உங்களுக்கு வேறே பிள்ளை வீடே

இல்லையா?

பெண்-3 : இவரு பி.எச்டி , பட்டத்துக்கான தீசீஸ் எழுதிக்கிட்டு இருக்கிறாரு இந்த நேரம் பார்த்துத் தான் நீங்க வந்து தொல்லை கொடுக்கணுமாக்கும்?

(இசை)

மகன் : என்னப்பா யோசிக்கிறீங்க? மூன்று மருமகளுங்க கிட்டே இருந்து கிடைத்த பதில்களை நினைச்சுப் பாக்கறிங்களாப்ப ? ஏம்பா! நாங்க அவங்களை யெல்லாம்விட வசதிக் குறைவானவங்க என்கிறதுக் காகத்தானே என் மனைவியை நீங்க கேட்கலை?

(குரல் கொடுத்து) கமலா. கமலா...

கம : என்னங்க அத்தான்? மகன் : அப்பா கூப்பிட்டாரு (தாமதம்)

கம : என்னங்க மாமா?

தக் கமலா, உடம்பு சரியில்லை ஒய்வெடுக்கலாம்னு ...