88
அலை தந்த ஆறுதல்
பெண் ‘இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை’
பின் : ஒரு திருமண நிகழ்ச்சியில் தந்தையும் வெளியூரி லிருந்து வந்த நான்கு பிள்ளைகளும் குடும்பத் துடன் கூட நேரிடுகிறது. அப்போது
தங் : ராஜா!
மகன் : ஏம்பா?
தக் உனக்குத் தவறு-இழைச்சிட்டேன்டா
மகன் : நீங்களா? எனக்கா? என்னப்பா சொல்றீங்க?
தங் உன் கூடப்பிறந்த மூன்று சகோதரர்களுக்கும் ஏதோ ஒரு வழி பண்ணினேன். அவனுங்களும் எப்படியோ முன்னுக்கு வந்துட்டானுங்க! பெரியவன் பெரிய பிஸினஸ் மேனா ஆயிட்டான். சுந்தரம் வட்டிக்குப் பணம் கொடுத்து வீடு வாசலுமா இருக்கான். ராமுவை எம்.ஏ., படிக்க வைச்சேன். உன்னைத்தான்
மகன் : அப்பா மூன்று பேருக்கும் நீங்க என்னென்னவோ கொடுத்திங்கப்பா. ஆனால், எனக்கு நீங்க புதையல் எடுத்துக் கொடுத்திருக்கீங்கப்பா.
தங் : புதையல்னா?
மகன் : “ஆமாம்பா. ஒரு நல்ல மனைவியைத் தேடிக் கலியாணம் பண்ணி வைக்கிறீங்களே-அது போதும்பா.. எ குட் வைப்ப் ஈஸ் எ கிரேட்
ட்ரெஷர் ஆப் ஹஸ்பென்ட்.