ககூ தருக்கவிளக்கம். முதலியவற்றினும் அதிவியாத்திவரும். என்னை? வேறுபடுப்பதாய இயல்பு, இலக்கியத்தன்மையை வரைந்து கொள்வதனொடு நியத மாய் ஒப்பநிற்பதுபோல, வேறுபடுத்தற்றன்மை முதலியவும் இலக் கிய யத்தன்மையை வரைந்து கொள்வதனொடு நியதமாய் ஒப்பநிற்ப னவே யாகலான்.
- வேறுபடுத்தலை விதந்து பிரித்துக்கூறியது அதுநவீன மதத்தில்
வேறுபடுப்பதாகவும் பிராசீனமதத்தில் வழங்குதற் பயத்ததாகவும் கொள்ளப்படும் என்பது தெரித்தற்பொருட்டு, வேறுபடுத்தல், வே றுபடுப்பதை நோக்க இலக்கணத்திற்குப் பயனாயும், வழங்குவதை நோக்க இலக்கணமாகவும், வழக்குவது பயனுக்குப் பயனாகவும் கருதக்கிடத்தல் காண்க. வேறுபடுத்தல் இயல்பு, வேறுபடுப்பது இயல்பி. இயல்புஎனினும், தருமம் எனினும், தன்மைஎனினும் ஒக் கும். இயல்பி,தருமி என்பன ஒருபொருட்கிளவி. பண்பிற்குப்பண்பு இன்று எனவும் தருமத்திற்குத் தருமம் உண்டுஎனவும் கொள்ளப் படும். அதின்வேறாய் - வேறுபடுத்தலின் வேறாய். வேறாய், என் அடைகொடுக்கற்பாற்று என்பது வேறாயஇயல்பு, வேறுபடுத்தற் பொருட்டேயாகலின், வேற்றியல்பாய வேறுபடுப்பதே இலக்க ணம், அல்லன இலக்கணமல்ல எனக்கோடற்பாற்று என்றவாறு. வழங்குவதூஉம் இலக்கணத்திற்குப் பயனாகக்கொள்ளின் எனவே அஃது இலக்கணம்பயனுடைத்தென்றற்கும், அப்பயன்றான் வழங் குதல், வேறுபடுத்தல் என இருவகைத் தென்றற்கும் ஞாபகமாவ துணர்க. ஞாபகம் - அறிவிப்பது. அவ்வடைவேண்டாஎன்பதுவழங்குவது உம் இலக்கணத்திற்குப் பயனாகக்கொள்ளின், வேறுபடுத்தலும் வழங்குதற்பொருட்டே யாக லின், வேறுபடுத்தற்றன்மையும் இலக்கணம் எனவே கோடற்பாற் றுஎன்றவாறு. பிறவற்றிற்கும் இஃதொக்கும். எனவே எவ்வியல்