தருக்கவிளக்கம். உடல்பொறி விடய மூவகைப் படுமே நம்மனோர் யாக்கை மண்கூற் றுடம்பு நாற்றங் கவர்வது நாசியி னுனியே மண்கல் முதலிய விடய மாகும். (இ-ள்.) இனி இவற்றினியல்பாவன:- உக பிருதிவியாவது நாற்றமுடையது. அது நித்தம் அநித்தம் என இருவகைத்து. நித்தம் பரமாணுரூபம்; அநீத்தம் காரியரூபம். மறித் தும், சரீர இந்திரிய விடயவேறுபாட்டால் மூவகைப்படும். சரீரம் நம்மனோர்க்குள்ளது. இந்திரியம் கிராணம்; நாற்றத்தைக் கவர்வது. அது நாசிநுனியில் இருப்பது. விடயம் மண், கல் முதலியனவாம். பிருதிவியாவது. எ- து. உத்தேசமுறையானே முதற்கட் பிரு திவியினிலக்கணங் கூறுகின்றது. உத்தேசம் பெயர்மாத்திரையா னே பொருளை எடுத்துரைத்தல். யாண்டும் உத்தேசமுறைமைக்கு இச்சையே காரணம். நாற்றமுடைமை பிருதிவியினிலக்கணமா யின், நறுநாற்றப்பொருளும் தீநாற்றப்பொருளுமாகிய அவயவங்க ளான் ஆக்கப்படுந்திரவியத்தின் ஒன்றுக்கொன்றுமாறுபாட்டால் நாற்றமுண்டாகாமையின், அவ்வியாத்திக்குற்றந்தக்கும்; ஆண்டு நாற்றத்தோற்றம் பொருந்தாதென்னற்க, அவயவநாற்றம் புலப் படுதலின், அவ்விரண்டன் கூட்டத்தானாய் கலப்புநாற்றமொன் றெனக் கோடல் பொருந்தாமையின்; இன்னும், தோன்றிய பொ ழுதே அழிவுபடுங்குடத்தினும் அவ்வியாத்தி வருமாலெனின்;- அற்றன்று, நாற்றத்தோடு ஒருங்கிருக்கும் பொருண்மைக்கு அபர மான சாதியுடைமையென்பதே கருத்தாகலின். அற்றேல், நீர்முத லியவற்றின் நாற்றம் புலப்படுதலின் அதிவியாத்தி வருமாலோவெ னின்; - அற்றன்று, உடன்பாட்டானும் எதிர்மறையானும் ஆண்
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/23
Appearance