தருக்கவிளக்கம் ஙங அவற்றுள்,பரமான்மா. எ -து. பரமான்மாவினிலக்கணங்கூறு கின்றது. நித்தமானஞானத்திற்கு இடமாதல் ஈசுரனிலக்கணம். அற்றேல், ஈசுரன் உண்டென்பதற்குப் பிரமாணமென்னை? அரு வப்பொருளாதலாற் புறவிந்திரியக்காட்சியன்று, ஆன்மாக்களின் சுகதுந்த முதலியவற்றின் வேறாதலால் அகவிந்திரியக்காட்சியு மன்று, இலிங்கமின்மையான் அனுமானமுமன்றாலெனின்;- அற் றன்று, அங்குரமுதலியன கருத்தாவையுடையன, காரியமாகலின், குடம்போலும்' என்னுமனுமானம் பிரமாணமாகலான் என்பது. கருத்தா உபாதானத்தைப் புலப்படக்காணும் அறிவிச்சை செயல் களையுடையபொருள். உபாதானம் சமவாயிகாரணம். பரமாணு முதலிய நுண்ணியபொருளெல்லாவற்றையுங் காண்டலின், ஈசு ரன்முற்றறிவன்; "இறைவனாவான்ஞானமெல்லா மெல்லா முதன் மையனுக் கிரகமெலா மியல்புடையான்" என்றற்றொடக்கத்தாக மமும் பிரமாணமெனவறிக. ம அருவமெனவே கண்ணிற்கும், பொருளெனவே ஏனையிந்திரி யங்கட்குங் காட்சியின்மை போதரல்காண்க. பொருள் என்றது ஈண்டுத் திரவியத்தை. என்னை? ஏனையிந்திரியக் காட்சியன்றாதல் சத்தமுதலிய குணங்கட்கின்று திரவியத்திற்கே யுண்டாகலான்.
- இலிங்கம் - குறி.
- ஈண்டு ஆகமம் என்றது தேனொழுகு திருவிருத்தச் சிவஞா
சித்தியினை. ன சீவான்மா.எ து. சீவனிலக்கணங் கூறுகின்றது. சுகமுத லியனவுடைமை சீவான்மாவினிலக்கணம். அற்றேல், 'யான் மனி தன் 'யான்பார்ப்பான்' என யாண்டும் யானென்னுமுணர்விற் குச் சரீரமே விடயமாகலின், சரீரமே ஆன்மாவெனிற்படுமிழுக் 3