தருக்கவிளக்கம். சகூ சையோகம். எ-து. கூட்டத்தினிலக்கணங் கூறுகின்றது. இவ் விரண்டுங்கூடி நின்றன' என்னும் வழக்கிற்குக் காரணமென்ற வாறு. சையோகம் தொழிலாற்றோன்றியதும், சையோகத்தாற் றோன்றியதுமென இருவகைத்து. கையின்றொழிலாற் கைக்கும் புத்தகத்திற்கும் உளதாய சையோகம் தொழிலாற்றோன்றியது. கைக்கும் புத்தகத்திற்கும் உளதாய சையோகத்தானே உடம்பிற் கும் புத்தகத்திற்கு முளதாய சையோகம் சையோகத்தாற் றோன் றியது. சையோகம் வியாபியாமலிருப்பது. வியாபியாமலிருத்தல் தன்னத்தியந்தாபாம்முந்தானும் ஓரிடத்திருத்தல், ஏகதேசத்திரு ப்பதென்றவாறாயிற்று. உ அ. ஆயிற் புணர்ச்சி யழிப்ப தாகி . யேய்குணம் பிறிவுள தெட்டொன் றினுமே. (இ-ள்) விபாகம் சையோகத்தை நாசம்பண்ணுங்குணம். விபாகமெனினும் பிரிவெனினுமொக்கும். அது ஒன்பதுபொருளி னும் இருப்பது . எ - று. விபாகம். எ 1 து. பிரிவினிலக்கணங்கூறுகின்றது. காலமுத லியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்குக் 'குணம்' என்றும், உருவமு தலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்குச் 'சையோகத்தை நாசம் பண்ணுவது' என்றும், கூறப்பட்டது. விபாகமும்தொழிலாற்றோன் றியதும், விபாகத்தாற்றோன்றியதுமென இருவகைத்து. கைக்கும் புத்தகத்திற்கும் உளதாய பிரிவு தொழிலாற்றோன்றியது. கைக்கும் புத்தகத்திற்கும் உளதாய பிரிவால் உடம்பிற்கும் புத்தகத்திற்கும் உளதாய பிரிவு விபாகத்தாற்றோன்றியது. உகூ. மொழியின் முன்மை முன்னென் வழக்கிற் கிழிவில் சிறப்புக் கருவி யெனப்படும்.
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/45
Appearance