உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். (இ-ள்.) காரணம் காரியத்திற்கு நியதமாய் முன்னிற்பது . எ - று. காரணம்.எ -து. காரணத்தினிலக்கணங்கூறுகின்றது. கழு தை முதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்கு 'முன்னிற்பது' என் றொழியாது 'நியதமாய்' என்றும், காரியத்தின் அதிவியாத்தி நீக்கு தற்கு 'நியதமாய்' என்றொழியாது 'முன்னிற்பது' என்றும், கூறப் பட்டது. 'நியதம்' இன்றியமையாமை. அற்றேல், நூலுருவமும் ஆடையைக்குறித்துக் காரணமாலோவெனின்;- அற்றன்று, பிறி தோராற்றாற் பெறப்படாததாயென்னும் அடைகொடுக்கற்பாற்றாக லின். பிறிதோராற்றாற் பெறப்படாமை பிறிதோராற்றாற் பெறப் படுதலின்மை. பிறிதோராற்றாற் பெறப்படுதல் மூவகைத்து, எத னோடு கூடியே எதனைக்குறித்து முன்னிற்பதென்று உணரப்படுவது யாது அஃது அதனைக்குறித்து அதனாலே பிறிதோராற்றாற் பெறப் படுவது: அதுநூலோடு கூடி நூலுருவமும் நூற்றன்மையும் ஆடை யைக் குறித்து முன்னிற்பதென்று உணரப்படுவது, ஒன்று. பிறி தொன்றனைக்குறித்து முன்னிற்றலுணர்ந்துழி எடுத்துக்கொண்ட தனைக் குறித்து முன்னிற்றலுணரப்படுவதியாது அஃது அவ்வெ டுத்துக்கொண்டதனைக் குறித்துப் பிறிதோராற்றாற் பெறப்படு வது: அஃது ஆகாயம் ஓசையைக்குறித்து முன்னிற்றலுணர்ந்துழிக் குடத்தைக்குறித்து ஆகாயம் முன்னிற்பதென்றுணரப்ப படுவ ஒன்று. மற்றவிடங்களிலே நியதமாய் முன்னிற்பது இதுவென்று துணியப்பட்டதனாற்றானே காரியந்தோன்றுழி அதனோடு உடனி கழ்வது பிறிதோராற்றாற் பெறப்படுவது; அது பாகத்தாற்றோன் றும் நிலத்து உருவத்தின் முன்னபாவம் நாற்றத்தைக்குறித்து முன் னிற்பதென்பது, ஒன்று,ஆகமூன்றுந் தெரிந்துகொள்க. இங்ஙனங் கூறியவாற்றாற் பிறிதோராற்றாற் பெறப்படாததாய் இன்றியமை யாது முன்னிற்பது காரணமெனக் கொள்க. வது,