உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். யாண்டுப் புகையுண் டாண்டுத் தீயுண் டெனத்துணி பொருளோ டேது விரண்டிற் கின்றி யமையா தெய்துட னிகழ்ச்சி கண்ட வுணர்வு கருத்தி னிருந்தோ ரேதுத் தோன்றுழி யெழும்ப வதன்பி னித்துணி பொருளி னிடைப்படு மேது வுறுவ தென்னு முணர்வா மஃதே குறியா ராய்ச்சி கூறுங் காலே. த கூரு (இ - ள்.) தன்பொருட்டனுமானம் தனக்கு அனுமிதி ஞா னம் விளங்குதற்குக் காரணம்: அங்ஙனமன்றோ, ஒருவன் தானே அடுத்தடுத்துக்காண்டலால் 'யாண்டுப்புகை ஆண்டுத் தீயுண்டு" என அடுக்களை முதலியவற்றின் அவ்விரண்டற்கும் வியாத்தியை உணர் ந்து, மலையின் அண்மைக்கட்சென்றான்; ஆண்டுச்சென்றுழி 'இம் மலையில் தீ யுண்டோ இல்லையோ' என ஐயுற்றான்; அம்மலையின் மேற் புகையைக்கண்டுழி 'யாண்டுப்புகை ஆண்டுத் தீ' என்னும் வியாத்தி நினைவு நிகழும். அந்நினைவுநிகழ்ந்தபின்னர், வன்னியின் வியாப்பியமான புகையையுடையது இம்மலை, என்னுமுணர்வு தோன்றும்: அதுவே இலிங்கபராமரிசமெனப்படும். அதனால் 'இம்மலை நெருப்புடைத்து' என்னும் அனுமிதிஞானம் தோன்றும். இது தன்பொருட்டனுமானமென்க. இலிங்கபராமரிச மெனி னும் குறியாராய்ச்சியெனினும் ஒக்கும். எ - று.

  • தனக்கு என்றது பிறரானல்லது தன்னானே தனக்கு என்

றவாறு. க