உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யா தருக்கவிளக்கம். ஒருவன்.எ-து.தன்பொருட்டனுமானத்தைத் தெரித்துக் காட்டுகின்றது. அற்றேல், 'யாண்டுப்பிருதிவியின் கூறந்தன்மை ஆண்டு இரும்பாற்போழற்பால தாந்தன்மை, என்றற்றொடக்கத்து உடனிகழ்ச்சி பலகாற்கண்டுழியும் வயிரமணி முதலியவற்றிற் பிற ழக் காண்டலின், அடுத்தடுத்துக்காண்டலால் வியாத்தி கவர்தல் ண்டையதெனின்;-அற்றன்று, பிறழ்ச்சி யுணர்வின்மையொடு கூடிய உடனிகழ்ச்சியுணர்வே வியாத்தியைத் தெரிவிப்பதாகலின். பிறழ்ச்சியுணர்வு துணிவும் ஐயமுமென இருவகைத்து. அவற்றுள், துணிவு இயல்பானே தெரிந்து நீக்கப்படும். ஐயப்பிறழ்ச்சி தருக் கத்தாற்றெரிந்து நீக்கப்படும். புகைதீக்களின் வியாத்தியுணர்தற் கட்பிறழ்ச்சியையப்பாடு நீக்குவது காரியகாரணத்தன்மைக்குக் கேடு வருமென்னுந் தருக்கமாமென்க. அற்றேல், உலகத்துள்ள எல்லாப் புகை தீக்களும் காட்சிப்படாமையின் வியாத்தியுணர்ச்சி யாண்டைய தெனின்;- அற்றன்று, புகைத்தன்மை தீத்தன்மை யாகிய அவற்றின் பொதுமைச்சாதி உணரப்படுதலின் எல்லாப் புகை தீக்களினுணர்வும் நிகழுமாகவினென்க. (அதனால்' என்பது இலிஙகபராமரிசத்தான் என்றவாறு. க

  • அடுத்தடுத்துக்காண்டலான் வியாத்தி கவரப்படும் என்பது

மேலே வருவதறிக.

  • பிறழ்ச்சியின்மையொடு கூடிய உடனிகழ்ச்சியுணர்வேவியாத்

தியைத் தெரிவிப்பது என்றது, மேலுதாரணத்தின்கண் எது துணி பொருளின்றி யிருப்பதாதலின் முன்னர்ப் பலகாற் காணப்பட்ட உடனிகழ்ச்சிக்குப் பிறழ்சசியுண்மை எய்துதலின் அஃது இன்றி யமையாதாதல் பெறப்படாமையான்.