தருக்கவிளக்கம். எக னத்தின்கண் உபாயம்எனப்படுவது என்பது. இறந்தது முதலியன வாவன;- புகையின்றியும் அதன் சுவடுடையதூஉம், இனிப்புகைவ ஏற்பாலது எனக்கருதப்படுவதூஉம் எனவருவன. வியாபாரமுடைத் தாகிய காரணம் என்றது வியாத்தியை. ஈண்டு வியாபாரமாவது ஆராய்ச்சி என்பது. அதனால். எ -து. அனுமானத்தை முடிந்ததுமுடித்தல் என் னும் உத்தியாற்கூறுகின்றது. ருஉ.மறையுடன் பாடே மன்னு மிரண்டு முறையொருங் கியைந்து முடியு நேர்மறை யெனக்குறி மூன்றா யியலு மென்ப. ம (இ - ள்.) இலிங்கம் அந்நுவயவெதிரேகி, கேவலாந்நுவபி, கேவல்வெதிரேகி என மூவகைத்து. அந்நுவயம் உடம்பாடு. வெதி நேகம் மறை அந்நுயை வெதிரேகி நேர்மறை. எ - று. இலிங்கம். எ-து. இலிங்கத்தைப் பகுக்கின்றது. ருங. இன்றி யமையா தீண்டுட னிகழ்ச்சி யுடன்பாட்டானு முறுமறை யானுந் துன்று குறிநேர் மறைசொ லதனை யடர்புகை யுடைமையி னறிக வினிதே. (இ - ள்.) அந்நுவயத்தானும் வெதிரேகத்தானும் வியாத்தி யுடையது அந்நுவயவெதிரேகி. வன்னியைச் சாதிக்குங்கால் புகை யுடைமை அந்நுவயவெதிரேகி, 'யாண்டுப்புகை ஆண்டுத்தீ அடுக் களைபோல என அந்நுலயவியாத்தியும், 'யாண்டுத் தீயில்லை ஆண்டுப் புகையில்லைமடுப்போல' எனவெதிரேகவியாத்தியும் உடைமையின். 9
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/73
Appearance