உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஅ தருக்கவிளக்கம். யோன் கூறுந்தொடர்மொழியைக் கேட்டபின்னர், இடைப்பட்ட முதியோன் முயலுந்தொழிலை நோக்கி, ஆவைக்கொணர அதனை யுங்கண்டு, இடைப்பட்ட முதியோன் முயலுந்தொழில் நிகழ்தற் குக் காரணமாகிய ஞானம் உடன்பாட்டானும் மறையானுந் தொ டர்மொழியாற்றோற்றற்பாவதெனத் தெளிந்து, 'குதிரையைக் கொணா' 'ஆவைக்கட்டு' என்னும் வேறுதொடர்மொழிக்கண் முன் னும்பின்னும் உற்றுநோக்கி, ஆவென்னும் பதத்திற்கு ஆத்தன்மை யடுத்த பிண்டத்தின்கண் ஆற்றல், குதிரையென்னும் பதத்திற்குக் குதிரைத் தன்மையடுத்த பிண்டத்தின்கண் ஆற்றல் எனச் சொற் பொருளுணர்ந்துகொள்ளுமென்க. அஃதங்ஙனமாக வழக்க மனைத்தும் யாண்டும் காரியப்பொருட்டாகலின், காரியப்பொரு ட்டு நிகழுந் தொடர்மொழிக்கண்ணே சொற்பொருள் உணரப்படு மன்றி நிகழ்ந்ததன்மேற்றாய தொடர்மொழிக்கட் சொற்பொரு ளுணர்ச்சி நிகழாதாலெனின்;- அற்றன்று, 'கூடலின்கண் முது குடுமிப்பெருவழுதியுளன்' என்றற்றொடக்கத்து நிகழ்ந்ததன்கண் ணும் வழக்கமுண்மையானும், 'மலர்ந்த தாமரைக்கண் வண்டுளது என்றற்றொடக்கத்து யாண்டும் உணரப்படும் பதத்தினைச் சார்த்தி வழங்குதலான் நிகழ்ந்ததன்கண்ணும் வண்டு முதலியவற்றின் சொற்பொருளுணர்வு நிகழக் காண்டலானும், என்க. அனுகூலமாய் சம்பந்தம் என முடிவுசெய்க.

  • ஆதன் முதலியவற்றை உதாரணங்காட்டியது பெயர் இச்சை

யானல்லது சம்பந்தத்தான் இடப்படாமை வெளிப்படையாகத் தோற்றுதற் பொருட்டு என்பது. வழக்காவது ஆட்சி,அஃதாவது சொல்லையெடுத்து வழங்குவது.

  • காரியமாவது தொழிலான் முற்றுப்பெறுவது. அதனைப்போக்

கிக்காண்க.