தருக்கவிளக்கம் 2. ஒளிரும் மாற்ற லுடைய தாகற் பாலதன் கிழமை பன்னிலக் கணைதான் புரையி லவ்வப் பொருளி னுணர்ச்சி விருப்பா னுரைக்கப் படுவ தொன்றாந் தன்மை கருத்துத் தானிக ழாமை யெண்ணி னிலக்கணைக் கேது வென்ப. அகூ இலக்கணையும் சத்தத்தின் கணுள்ளது. ஆற்றலுடைத்தாகற் பாலதன் சம்பந்தம் இலக்கணை: அது 'கங்கையின் கணிடைச்சேரி என்பது. ஈண்டுக் கங்கையென்னுஞ் சொற்குப் பொருளாகிய வெள்ளத்தின் சம்பந்தத்தானே கரையென்பது உணரப்படுமாக லின், கரையின்கண்ணும் ஆற்றலுடைத்தென்றல் வேண்டாமை யுணர்க. மா முதலிய பதங்கட்காயின் மாமரத்திற்கும் குதிரைக்கும் ஒன்றற்கொன்று சம்பந்தமின்மையின், ஆண்டு வெவ்வேறாற்றல் வேண்டற்பாலனவாம். அவ்விலக்கணை விட்டவிலக்கணையும், விடாதவிலக்கணையும் விட்டுவிடாதவிலக்கணையு மென மூவகை த்து. சொல்லின்பொருட்குக் கொண்டுகூட்டில்லாதவிடத்து விட்டவிலக்கணை: அது 'கட்டில் கரைகின்றது' என்பது. சொல் லின்பொருட்கும் கொண்டுகூட்டுள்ளவிடத்து விடாதவிலக்கணை: அது 'கவிகையாளர் செல்கின்றார்' என்பது. சொற்பொருளின் ஏகதேசத்தை விட்டு ஏகதேசத்திற்குக் கொண்டு கூட்டுள்ளவிடத்து விட்டுவிடாதவிலக்கணை: அது 'அது நீயாகின்றாய்' என்பது. 'குன்றம்யானை' என்றாற்போல உருவகமுதலியனவும், குறிக்கப்ப டுங்குணத்தின் சம்பந்தத்தான் உணரப்படுதலின். இலக்கணையே யாம். குறிப்பும் ஆற்றல் இலக்கணை என்னுமிலற்றுள் அடங்கும். எ
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/89
Appearance