பக்கம்:அழகர் கோயில்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 அழகர்கோயில் மணர் வருகைக்கு முன்னர் பகவதி கோயில்களில் அவர்களே பூசை செய்வோராக இருந்திருக்கவேண்டும் என்று கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.** திருமணத்தன்று மணமக்களுக்குப் பிராமணப் புரோகிதர் கட்டும் காப்புநாணை, மறுநாள் நாவிதர் சாதியினர் புரோகிதர்க் சூரிய மரியாதையினைப் பெற்று அறுப்பது, தென்மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியாரிடம் நடைமுறையில் இருந்து வருகிறது. "பாப்பானுக்கு மூப்பு பறையன், கேப்பார் இல்லாமல் கீழ்சாதி யானாள்" என்னும் வழக்கு மரபு தென்மாவட்டங்களில் பெருக வழங்குகிறது. தாழ்த்தப்பட்ட சாதியார் பெற்றுள்ள தனி உரிமை கள் பிராமணர்கள் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டில் அவர்கள் பெற்றிருந்த உயர்ந்த இடத்தை உணர்த்துகின்றன. பிராமணர் தலைமை பெற்ற மதங்களில் தாழ்த்தப்பட்ட சாதி யாருக்குத் தரப்படும் 'தனி உரிமைகள்' இந்த வரலாற்றுப் பின்னணியை மனத்தில்கொண்டு தோன்றிய வழக்கமாயிருக்கலாம். அழகர்கோயிலில் பள்ளர், பறையர் ஆகிய சாதியினரின் ஈடுபாடும், பிராமண குருவான ஆண்டாரிடம் அவர்கள் பரிவட்ட மரியாதை பெறுவதும்கூட முற்குறித்த தொல்லெச்சங்களில் (vestiges) ஒன்றாக இருக்கமுடியும். இராமானுசர்க்குப்பின் தமிழ்நாட்டு வைணவம் தாழ்த்தப்பட்ட சாதியாரை ஈர்க்கமுயன்ற அம்முயற்சிக்கும் வைணவம் இவ்வரலாற்றுப் பின்னணியை நினைவில் கொண்டது காரணமாயிருக் கலாம். இந்திர வழிபாட்டினரான உழவர்களைப் பலராம வழிபாட் டினையிட்டுத் தமிழ்நாட்டு வைணவம் தன்பக்கம் ஈர்க்க முயன்றது. தமிழ்நாட்டில் தென்பகுதியில் அழகர்கோயிலை மையமாகக்கொண்டு அம்முயற்சி நடந்தது; வைணவம் அம்முயற்சியில் பெற்ற வெற்றி யின் தொல்லெச்சங்கள் இன்றும் உள்ளன. தமிழ்நாட்டு வைணவம் சாதி வேற்றுமையைப் புறந்தள்ளியதனால், அவ்வெற்றி சமய வரலாற்றில் நிலைநிறுத்தப்பட்டது. குறிப்புகள் 1. களஆய்வு நாள்: 9, 10, 11.5.1979, பார்க்க: பிற்சேர்க்கை எண் IV:1. 2. Gustav Oppert, The Original Inhabitants of India, p. 75. 3. Edgar Thurston, Caste and Tribes of Southern India, Vol. VI, pp. 472-473.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/115&oldid=1467980" இலிருந்து மீள்விக்கப்பட்டது