பக்கம்:அழகர் கோயில்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் பள்ளர் பறையரும் 107

    • அநேகமாகக் குருபரம்பரைக் கதைகள் இரண்டே அடிப்படையில் அமைந்திருக்கின்றன. ஒன்று தெய்வத்தன்மை ஜாதிக்கட்டுப் பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பது. மற்றொன்று எவ்வளவு ஆபத்து வந்தாலும் விஷ்ணு ஒருவனே நெய்வம் என்ற கருத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதாம்" என்கிறார் அவர்.19

5.3.8. வரலாற்றில் தாழ்த்தப்பட்டோர்: தாழ்த்தப்பட்ட சாதியாருக்குத் தமிழ் நாட்டு வைணவம் சமய எல்லைக்குள் உயர்வு தந்தது. எனினும் தென்னிந்தியாவில் பிராமணர் வருகைக்கு முன்னர் தார்த்தப்பட்ட சாதியினராக இன்று கருதப்படும் சில இனத்தவரே பிராமணர்கள் பெறும் இடத்தினைப் பெற்றிருந்தனர் என அறிஞர் சிலர் கருதுகின்றனர். “பிராமணர் வருகைக்கு முன்னர் தென்னிந்தியாவில் இன்று அடிமைச் சாதியாராகக் கருநப்படுவோர் மிக உயர்த்த இடத்தைப் பெற்றிருந்தனர் என்பது தெரிந்த செய்தியே. அவர்களே நில உடைமையாளராக இருந்தனர். அவர்கள் பெற்றிருந்த உயர்வுகள் வினோதமான தொல்லெச்சங்களாக, சில ‘தனிஉரிமை’களின் வடிவில் இன்றும் காணப்படுகின்றன. அவற்றின் தோற்றம் மறக் கப்பட்டுவிட்டதால் அவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன" என்று கூறும் வாலவுஸ் (Walhouse)"0 மதுரை மாவட்டத்தில் சல்லிக்கட்டு விழாக்களில் கள்ளர் சாதியினரே பூசாரியாகவும். தெய்வ வாக்கினைத் தெரிந்து சொல்பவராகவும் உள்ளதையும், திருவாரூர்க் கோயில் திருவிழாவில் ஒரு பறையர் யானை மீதேறி வருவதையும், சென்னையைச் சேர்ந்த வாணிகச் சாதியினர் சிலரும், விசாகப் பட்டினத்தைச் சேர்ந்த பிராமணர்களும் தங்கள் வீட்டுத் திருமணங் களுக்குத் தாழ்ந்த சாதியாரிடம் சென்று அனுமதி பெறும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்ததனையும் எடுத்துக்காட்டுகிறார். 21 “தமிழ்நாட்டில் மாரியம்மன்கோயில் திருவிழாக்களில் பறையர் களே அத்தேவதையின் மணமகனாகக் கருதப்படுகிறார்கள்" எனக் கூறும் அனுமந்தன், தென்னிந்தியாவில் பிராமணர் வருகைக்கு முன்னர் பறையர், அரசர் ஆநரவும் சமயத் தலைமையும் பெற்றிருந்த தாகக் கூறுவர்.23 கேரளத்தில் பகவதி கோயில்களில் சாமியாடும் தாழ்ந்த சாதி யாரான வெளிச்சப்பாடுகளைப் பற்றி எழுதும்போது, "ஆரியப்பிரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/114&oldid=1467979" இலிருந்து மீள்விக்கப்பட்டது