பக்கம்:அழகர் கோயில்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 அழகர்கோயில் முன்னரே, ஆளவந்தாரின் மாணவராகித் திருவரங்கத்தில் வசித்த மாறனேரி நம்பி தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவரே. பெரியநம்பி என்னும் வைணவப் பிராமணரே அவருக்கு இறுதிக்கடன்களைச் செய்தார். இராமானுசர் அந்நெறியைத் தொடர்ந்தார். இதற்கு இராமா னுசர் பிராமணரல்லாத திருக்கச்சி நம்பியைத் தன் வீட்டில் உண்ண வைத்தது, காவிரியில் நீராடியபின் பிராமணரல்லாத உறங்காவில்லி தாசரின் தோளில் கையிட்டு வந்தது, மேல்கோட்டை கோயிலில் தாழ்த்தப்பட்டோரை அனுமதித்தது என அடுக்கிய சான்றுகளைக் காட்டலாம். இராமானுசருக்குப் பின்னர் இந்த உணர்வு தொடர்ந்து வந்தது தமிழ்நாட்டு வைணவத்தின் சிறப்பாகும். பிற்காலத்தெழுந்த பெரிய திருமுடியடைவு. மாறனேரி நம்பியைக் குருவாகவே ஏற்றுக் கொண்ட செய்தி உணரத்தகுந்ததாகும். "யாமுனாசார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கஸ்தல நிவாஸிதம் ஞானபக்த்யாதி ஜலதிம் மாறனேரி குரும் பஜே16 (ஆளவத்தாரின் மாணவரும், திருவரங்கத்தில் வசிப்பவரும், ஞானம் பக்தி முதலியவற்றில் கடல் போன்றவருமான மாறனேரி நம்பி எனும் குருவினைத் தொழுகிறேன்). மக்களை

  • ‘அகோபிலமடத்து ஆதிவண்சடகோபஜீயர் மலைச்சாதி வைணவத்திற்கு மாற்றுவதற்கென்றே சமயப் பரப்பு நர்களைக்கொண்ட நிறுவனமொன்றை ஏற்படுத்தினார்” என்று செகதீசன் கூறுகிறார்17. ஆனால் செகதீசன் கூறும் மற்றொரு கருத்தினை ஏற்கவியலாது. "தாழ்ந்த சாதிக்காரர்க்குத் தாழ்ந்த நிலையிலுள்ள குரு பஞ்ச சம்ஸ்காரம் செய்கிறார்" என்கிறார் அவர்13, அழகர்கோயில் ஆண்டார், இராமானுசரின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவரான திருமாலை ஆண்டான் கால்வழியினராவர். சாதிவேறு பாடின்றி அவர் 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்கிறார். 21.4.1978 இல் அழகர்கோயிலில் தோழப்பர் அழகர் ஐயங்கார், தாழ்த்தப்பட்ட சாதியாருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்வதைக் காணும் வாய்ப்பு ஆய்வாளருக்குக் கிட்டியது.

வைணவ மரபுக்கு (சம்பிரதாயத்திற்கு) உயிரான பரம்பரைக் கதைகள் பற்றி வைணவ அறிஞர், அக்னிகோத்ரம், ராமானுஜ தாத்தாச்சாரியார் கருத்தும் இங்கே எண்ணத் தகுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/113&oldid=1467978" இலிருந்து மீள்விக்கப்பட்டது