பக்கம்:அழகர் கோயில்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் பள்ளர் பறையரும் 105 காரைச்சேரிச் சமயத்தாருக்கும் தன் சமய ஆட்சிக்குட்பட்ட சில கிராமங்களின் பெயர்களே தெரிந்திருக்கின்றன. வரிச்சியூர், பறையன்குளம் ஆளவந்தான், குன்னத்தூர், ஓவலூர், களிமங்கலம், உடன் குண்டு, ஆண்டார்பட்டினம், கருப்பாயிஊரணி, கோயில்குடி, எலமனூர், பொட்டப்பனையூர், மயிலங்குண்டு, புதூர் ஆகிய கிராமங்கன் இவரது சமய ஆட்சி எல்லைக்குட்பட்டன. இவையனைத் தும் மதுரைக்கு ஐந்து மைல் கிழக்கில், வையையாற்றின் வடகரை யில் அமைந்தவை. அழகர் ஆற்றிலிறங்கிய அன்று இரவு வண்டியூர்ப் பெருமாள் கோயிலில் தங்குவார். ஆண்டார் அக்கோயிலின் பின்புறம் காரைச் சேரிச் சமயத்தார் அமைத்துத்தரும் ஓலைக்கொட்டகையில் தங்கு வார். கப்பலூர்ச் சமயத்தார் ஆண்டாருக்கு உதவியாக இருப்பார்; இவர் சித்திரைத் திருவிழாவில் ஆண்டாருக்குமுன் வெள்ளைக்கொடி பிடித்து வருவார். எட்டிமங்கலம் சக்கன் தாதனும், சுந்தரராஜன்பட்டி பொக்கன் தரதனும் ஆண்டாரின் சமய அரசாங்கத்தின் கோமாளிகள் ஆவர். இவர்கள் தலையில் குல்லாவுடன் குரங்குபோல் வேடமிட்டு, சோளிப்பல் வரிசை கட்டிச் சித்திரைத் திருவிழாவில் ஆண்டாகுடன் வருவர். இவர்களனைவரும் ஆடித்திருவிழாவில் ஆண்டார் வழியாகக் கோயில் பரிவட்ட மரியாதை பெறுவர். தங்கள் வீட்டில் தந்தை இறந்துவிட்டால், இறந்தவரின் மகன் ஆண்டார்க்குச் சேதி சொல்லிப் பரிவட்டமும், கோயில் தீர்த்தமும், இறந்தவர்க்குரிய மரியாதை யாகப் பெற்றுச்செல்வது வழக்கம். தற்காலத்தில் இந்த நடைமுறைகள் சிறிது சிறிதாகச் சிதைத்து வருகின்றன. காரைச்சேரி சமயத்தார் குடும்பத்தில் ஒரு பகுதியினர் கிறித்தவராக மதம் மாறியிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். 5.3.7. தாழ்த்தப்பட்டோகும் தமிழ்நாட்டு வைணவமும் : தமிழ்நாட்டு வைணவம் தாழ்த்தப்பட்ட இனத்தவரைத் தம் சமய எல்லைக்குள் ஈர்த்துக்கொள்வதற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. வைரவ சமயச் சீர்திருத்தவாதியான இராமானுசர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/112&oldid=1467977" இலிருந்து மீள்விக்கப்பட்டது