பக்கம்:அழகர் கோயில்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 அழகர்கோயில் மட்டும் அழகர்கோயிலையிட்டு இன்னும் வைணவ நெறியில் வாழ்கின்றனர். 5.3.6. சமயத்தாரும் ஆண்டாரும் : அழகர்கோயில் திருமாலை ஆண்டாரின் சமயத்தார்களில் மூடுவார்பட்டி எட்டிமங்கலம். சுந்தரராஜன்பட்டி, காரைச்சேரிச் சமயத்தார்கள் பள்ளர் சாதியினர்; சாம்பக்குளம் சமயத்தார்க்குத் (கோனார்) துணைசெய்யும் 'கொண்டித்தாரா பாம்பூரைச் சேர்ந்த பள்ளரே உள்ளனர். கப்பலூர்ச் சமயத்தார் பறையர் சாதி வினர். திருப்புவனம் சமயத்தாருக்குத் (நாயுடு) துணையாகப் பறை யர் சாதியினரான கலியாந்தூர் கொண்டித்தாதர் உள்ளார். தாழ்த் தப்பட்ட இனத்தினரான சமயத்தாரில் காரைச்சேரி, முடுவார்பட்டி. ஆகிய இரு சமயத்தாரும் தளபதிச் சமயத்தார் ஆவர். ஏனையோர் 'கொண்டித்தாதர்' என்றே பெயர் பெறுகின்றனர். 'கொண்டி’ என்ற சொல் 'உதவி' என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இப்போதுகூட (1979) முடுவார்பட்டிச் சமயத்தார் கோவிந் தனும், கப்பலூர்க் கொண்டித்தாதர் ரெங்கன் கோடாங்கியும் 'பஞ்ச சம்ஸ்காரம்' என்னும் 'அக்கினி முத்திரை' பெற்றுள்ளனர். இவர்கள் எப்பொழுதும் புலால் உண்பதில்லை. ஏனைய சமயத்தார்கள் திருவிழாக் காலங்களில் மட்டும் புலால் உண்ணாது விரதம் இருக் கின்றனர். முடுவார்பட்டிச் சமயத்தார் மட்டும் தன் சமய ஆட்சிக்குட் பட்ட கிராமங்கள் நாற்பத்தெட்டில் முப்பத்தொன்றின் பெயர்களைத் தருகின்றார். அவையனைத்தும் அலங்காநல்லூரிலிருந்து நாற்புற மும் ஆறு மைல் தொலைவுக்குள் உள்ளன. திருப்பாலை, பிள்ளையார்நத்தம், புதுப்பட்டி, ஐயூர், எர்ரம் பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, வலையபட்டி, லிங்காவடி, பரளி, சத்திரப்பட்டி, சின்னப்பட்டி, காவனூர். கருவனூர், பெந்தாம் பட்டி, மாலைப்பட்டி, வெளிச்சநத்தம், சோழனம்பட்டி, குளமங்கலம், வடுகபட்டி, தூதக்குடி, குமாரம், மயிஞ்சி, அலங்காநல்லூர், கல்லணை, ஊர்சேரி, மேட்டுப்பட்டி, அம்பட்டபட்டி, பூலாம்பட்டி, சேலார்பட்டி, முடுவார்பட்டி ஆகிய ஊர்கள் இவரது சமய ஆட்சிக்குட்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/111&oldid=1467976" இலிருந்து மீள்விக்கப்பட்டது