பக்கம்:அழகர் கோயில்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 அழகர்கோயில் இந்த ஆத்திர உணர்வு வெளித்தோன்ற முடியாத ஓர் எதிர்ப் புணர்ச்சியாகும். எங்கே அநீதியும் அடக்குமுறையும் உள்ளனவோ அங்கே அவற்றிற்குப் பலியானவர்கள், நாட்டுப்புறப் பண்பாட்டிய லில் தங்களுக்கு வடிகால் (solace) அமைத்துக்கொள்வதைப் பார்க்க லாம். அச்சமூட்டும், ஆனால் எதிர்க்க இயலாத தனியாரையோ நிறுவனத்தையோ நோக்கிய நாட்டுப்புற மக்களின் கோபமானது கேலிகள் (jokes). பாடல்கள், பழமொழிகள் இவற்றின் மூலமாக வெளிப்படுகிறது" என்பர் ஆலன் டண்டீஸ் (Alan Dundes). 13 பிற சாதியினரோடு, குறிப்பாகக் கள்ளர்களோடு போட்டியிட்டுக் கோயில் நடைமுறைக்குள் நுழையமுடியாத நிலையில் வலையர்களிடம் சாமியைத் தாங்களே கண்டுபிடித்ததாகக் கதை நிலவியிருக்க வேண்டும். இதையே பொன்னுசாமி வித்துவான் பின்னொரு காலத் தில் வர்ணிப்புப் பாடலாகப் பாடியிருக்கவேண்டும் என்றெண்ணத் தோன்றுகிறது. குறிப்புகள் 1. Rev. M.A. Sherring. Hindu Tribes and Castes, Vol. III, p. 143, 2. Edgar Thurston, Castes and Tribes of Southern India, Vol. VII, p. 274. 3. lbid., p. 274. 4. Ibid., p. 274. 5. Ibid. p. 273. 6. தகவலாளி : சேகர், கள்ளந்திரி, கள ஆய்வு நாள் : 27-11-1977. 7. தகவலாளி : ஆறுமுகம். கள்ளந்திரி, 27-11-1977 8. பார்க்சு: பிற்சேர்க்கை எண் 11 : 2. 9. களஆய்வு நாள் பார்க்க : பிற்சேர்க்கை எண் [l : 4,வரி 83 10. உேவது, வரிகள் 47-49. 11. மேலது, வரிகள் 58-59.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/123&oldid=1467988" இலிருந்து மீள்விக்கப்பட்டது