பக்கம்:அழகர் கோயில்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் வலையரும் வலையர்கள் 115 வைனவு சமயச்சார்பு அரிசனங்களை ஒத்த பழகநிலை உடையவர்களென்றாலும். Curw அரிசனங்களைப் (religious identity) பெறுவதில் நாட்டம் கொள்ளவில்லை. இவர் கள் ஒரு குருவினை எற்று வைணவ அடியாராக வருவதோ நெற்றியில் திருமண் இடுவதோ இல்லை. அதிகமாக வைணவப் பெயர்களை இடும் வழக்கமும் இவர்களிடத்தில் இலலை. மொத்தத தில் சமயசசார்போடு கோயிலுக்குள் நுழைய இச்சாதியினர் முயன்ற தில்லை எனத் தெரிகிறது. ஆய்வாளர் நடத்திய களஆய்விலிருந்து வேடமிட்டு வழிபடும் அடியவரில் மூன்று விழுக்காடே வலையான இருப்பதை அறியமுடிந்தது. கள்ளர் சாதியினர் அழகர் ஊர்வலத்தை ஒரு காலத்தில் மறித்தவர்கள். வலையர்களும் கோயிலில் ஒருமுறை கொள்ளையிட் டிருக்கின்றனர். ஒரே நிலப்பகுதியிலேயே இரு சாதியினரும் வாழ் கின்றனர். இருப்பினும் பிற்காலத்தில் கோயில் நடைமுறைகளில் கள்ளர்க்குக் கிடைத்த பங்கும் மரியாதையும் வலையர்களுக்குக் கிடைக்கவில்லை. இதற்கான காரணங்களை நோக்கவேண்டும். வலையர்கள் பொருளாதார நிலையில் இன்றளவும் வறியவர்களே. அக்காலத் தில் இவர்களது சமூகத்தகுதியும் (social status) ஏறத்தாழ அரிசனங்களோடு ஒத்ததாகவே இருந்தது. கோவிலையொட்டி ஐந்து மைல் சுற்றளவில் மட்டுமே வலையர் மிகுதியாயீருக்க, கள்ளர்களோ கிழக்கே இருபத்தைந்து மைல் தொலைவுவரை பெரும்பான்மை யினராக உள்ளனர். கள்ளர்களைப் போலப் போர்க்குணமும் இவர் களுக்கு இல்லை. கள்ளர்களைப் பகைத்துக்கொண்டு சொத்துடைமை நிறுவனமான கோயில் அக்காலத்தில் நடக்க இயலாது. கோயில் பரம்பரை பிராமண ஊழியர்க்குக் கள்ளர் நாட்டுப் பகுதியில் இன்றன வும் நிலங்கள் உள்ளன. இவைபோல, கோயிலின் இயக்கத்தைத் தடைசெய்யும் எந்தச் சக்தியும் வலையர்களிடம் இல்லை. மேலும் கள்ளர்களின் ஆணையினைக் கோயில் பெற்றால், எண்ணிக்கைச் சிறுபான்மையினரான வலையர்கள் ஏதும் செய்யமுடியாது. எனவே கள்ளர்களை ஏற்றுக்கொண்ட கோயில், வலையர்களை எளிதாகப் புறந்தள்ளிவிட்டது. கள்ளர்களைப்போல, தங்கட்குக் கோயிலில் பங்கில்லையே என்ற ஆத்திர உணர்வு வலையர்க்கு ஏற்படுவது இயற்கையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/122&oldid=1467987" இலிருந்து மீள்விக்கப்பட்டது