பக்கம்:அழகர் கோயில்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

128 அழகர்கோயில் கப்பட்டு, அதன்மீது நைலத்தில் குழைக்கப்பட்ட சாத்தினைப் பூசியுன் ளனர். மூன்றாண்டுகட்கு ஒருமுறை இச்சாந்தினைக் களைந்து விட்டுப் புதிய சாந்தினைத் திரும்பவும் பூசுகின்றனர். இச்சாந்தினைக் கோயிற் பணியாளர் செய்வதில்லை. திரு வரங்கத்தில் சில குடும்பத்தினர் இதனை ஒரு கலையாகப் பயின்று காத்து வருகின்றனர். சந்தனக்கட்டையினைப் பொடியாக்கி, சாம்பி ராணியோடு அதனைக் கலந்து ஒரு கலத்திவிட்டு, மண்ணில் புதைத்து நிலச்சூட்டினால் அதனை நீர்ப்பொருளாக்கி, அதளோடு வேறு சில பொருட்களைக் கலந்து, சாந்துக் கட்டிகளாக்குகின்றனர். இச்சாத்துக் கட்டிகளோடு பச்சைக்கருப்பூரத்தினைச் சேர்த்தால் சாந்து இளகிவிடுகிறது. இவ்வாறு இளக்கிய சாந்தினையே திரு மேனியிற் பூசுகின்றனர். இதுவே தைலப் பிரதிஷ்டை எனப்படும். கல்லின்மேல், சாந்து பூசப்பெற்று மூலத்திருமேனியினை யுடைய எல்லா வைணவக் கோயில்களிலும், இத்திருவிழா நடை பெறும். இவ்வாறமைந்த மூலத்திருமேனிக்குத் திருமஞ்சனம் செய் வது (நீராட்டு) இல்லை. அழகர்கோயிலிலும் இவ்வாறமைத்த மூலத்திருமேனியைத் திருமஞ்சனமாட்டுவதில்லை. தைலம் சாத்திய பின் ஆறுமாதகாலத்திற்கு இத்திருமேனிக்குக் கருவறையிலிருந்து கருப் பூர ஆரத்தி காட்டுவதுமில்லை. நெருப்பின் வெம்மையில் பூசிப் பெற்ற சாந்து இளகிவிடும் என்பதே காரணம். மூலத்திருமேனிக்குத் தைலம் சார்த்தப்பெறும் நாட்களில் எல்லாப் பூசைகளையும் உலோகத்தாலான மற்றொரு திருமேனிக்கே செய்வர். தைலம் சார்த்தப்பெற்றபின் மூலத்திருமேனி அடியார்க்குக் காட்சி அளிப்பதே திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தைலம் சார்த்துவதால் மூலத்திருமேனி பழுதுபடாமல் காக்கப்பெறுவதோடு, இறைவனின் அருளும், ஆற்றலும் காக்கப்படுவதாகப் பிராமணப் பணியாளர் நம்புகின்றனர். 6.4.14. கஜேந்திரமோட்சம் - தெப்பத்திருவிழா : மாசி மாதம் பௌர்ணமியன்று. இக்கோயிலில் தெப்பத்திரு விழா நடைபெறும். தெப்பத்திருவிழாவிற்கு முதல் நாள் 'கஜேற் திரமோட்சம்' எனும் யானைக்கு முத்தியளித்த திருவிழா நடை பெறும். இவ்விழாவும் தெப்பக்குளத்திலேயே முன்னர் நடைபெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/135&oldid=1468000" இலிருந்து மீள்விக்கப்பட்டது