பக்கம்:அழகர் கோயில்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருவிழாக்கள் 120 வந்ததாம். தற்போது கோயில் முற்றத்திலுள்ள ஒரு கல்நொட்டி யிடையே ஒரு பொய்கையாகப் பாலித்து இறைவனை அதன்முள் எழுந்தருளச் செய்கின்றனர். கோயில் 'கொத்தனால் செய்யப்பட்ட முதலை, யானைப் பொம்மைகளை நீரில் நிறுத்தி இவ்விழாளினைக் கொண்டாடிவிடுகின்றனர். தெப்பத்திருவிழா நடைபெறும் நெப்பக்குளம் கோயிலுக்கு ஒரு மைல் தெற்கிலுள்ள பொய்கைக்கரைப்பட்டி கிராமத்திலுள்ளது. தெப்பத்தின் மீது. சப்பரத்தில் இறைவன் தேவியரொடு அமர்ந்து பத்துமுறை சுற்றிவருகிறார். 'தெப்பம் கட்டும் வேலை கோயிற் பணியாளர்க்குரியதன்று; ஒப்பந்தக்காரர்களால் செய்யப்படுகிறது. 6.4.15: 'திருக்கல்யாணத் திருவீழா : " பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் கோயிலின் முன்னுள்ள கல்யாண மண்டபத்தில் இத்திருவிழா நடைபெறும். பெரும்ப நகர்ப்புற மக்களும், சிறிய அளவில் கிராமத்து மக்களும் இந்திரு விழாவில் கலந்துகொள்கின்றனர். பெண்கள் கூட்டமே அநிசமாகக் காணப்படுகின்றது. 5.5. சமூகத் தொடர்புடைய திருவிழாக்கள் : 6.5.1. தேரோட்டம் : குறிப்பிட இக்கோயிலுக்கென்று சில தனித்த நடைமுறைகளைக்' கொண்ட திருவிழாக்களில் முதலில் வேண்டியது தேரோட்டம் ஆகும். ஆடி மாதம் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் திருநாளர்ன பௌர்ணமியன்று தேரோட்டம் நடை பெறும். தேரோட்டம் முடிகின்றவரை திருவிழா நாட்களில் காலை யிலும் மாலையிலும் இறைவனின் போர்க்கருவியான திருவாழி யாழ்வார் (சக்கரத்தாழ்வார்) தேரோடும் வீதியில் வலம்வந்து, திக்குத் தெய்வங்கட்குப் பலி (படையல்) இடுகின்றார். கோயி லுக்குள் இருந்து வெளிவரும் சக்கரத்தாழ்வார் சிவிகை ஆண்டு முழுவதும் அடைக்கப்பெற்றுள்ள பதினெட்டாம்படிக் கோபுர வாசலைத் திறந்து அதன் வழியே வெளிவருவதும், அதே வழியில் திரும்பிச் செல்வதும் ஆடித் திருவிழாவில் குறிப்பிடத்தக்க நிகழ்ச் சியாகும் (படம்: 11). பொதுமக்களும், திருவீதி எழுந்தருளக்' கோயிலைவிட்டு வெளிவரும் இறைவனின் பல்லக்கும்கூட இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/136&oldid=1468003" இலிருந்து மீள்விக்கப்பட்டது