பக்கம்:அழகர் கோயில்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146 அழகர்கோயில் சொர்ணக் கிளிபோல-மீளாள் சோறுகொண்டு போனாளாம் நேரங்கள் ஆச்சுதென்று-சொக்கர் நெல்லெடுத்து எறிந்தாராம் அள்ளி எறிந்தாராம் அளவற்ற கூந்தலிலே மயங்கி விழுந்தாளாம்-மீனாள் மல்லிகைப்பூ மெத்தையிலே சோர்ந்து விழுந்தாளாம் சொக்கட்டான் மெத்தையிலே அழுதகுரல் கேட்டு அழகர் எழுந்திருந்து வரிசை கொடுத்தாராம் வையகத்தில் உள்ளமட்டும் சீரு கொடுத்தாராம் சீமையிலே உள்ளமட்டும் மானாமதுரை விட்டார் மதுரையிலே பாதிவிட்டார் தல்லாகுளமும் விட்டார் தங்கச்சி மீனாளுக்குத் தளிகையிலே பாதிவிட்டார்12 என்பது மக்களிடையே வழங்கும் ஒரு தாலாட்டுப் பாடலாகும். மைத்துனராகிய சிவபெருமானுடைய கோபத்தையும், தங்கை மீனாட்சியினுடைய வருத்தத்தினையும் அண்ணனாகிய அழகர். தான் கொண்டுவரும் சீர்வரிசைகளால் தணிக்க முற்படுகிறாரேயன்றி, அவர்களின் பிணக்கிற்கான காரணத்தைக் கண்டறிய முற்படவில்லை. அவர்களின் பிணக்கினை தீக்குவதற்கான வழி பெண்ணுக்குப் பிறர் வீட்டிலிருந்து செல்லும் சீர்வரிசைகள் என்பது மட்டும் அவருக்குத் தெரிகிறது. ஏனெனில் அதுதான் சமூகத்தில் நிலவி வரும் வழக்கமாகும். பெண்ணுக்குச் சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூக அமைப்பில் திருமணத்தின்போது நகையாகவும் பின்னர்ச் 'சீர்வரிசை' என்ற பெயரிலும் அவள் பிறந்த வீட்டுச் சொத்தின் தன்பங்கினைப் பெற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/153&oldid=1468022" இலிருந்து மீள்விக்கப்பட்டது