பக்கம்:அழகர் கோயில்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவும் பழமரபுக் கதையும் 151 தாணியை சித்ரரூபமாக எழுதிவைத்து ப்ரதிஷ்டிப்பித்து" என்றும் கூறுகிறது. 20 “துலுக்கநாய்ச்சியார் கதை முகமதியப் படையெடுப்பு, ஸ்ரீரங் கத்தின் சிதைவு இவை பற்றிய நினைவுகளில் இருந்து பிறந்திருக்க வேண்டும். நாட்டுப்புறப் பண்பாட்டியல் ஆய்வுமாணவர்க்கு இது ஒரு நல்ல செய்தி. ஸ்ரீரங்கம் மட்டுமன்றி, முசுலிம் படையெடுப் பினால் ஏதேனும் ஒருகாலத்தில் தொல்லையுற்ற பெரும்பாலான விஷ்ணுகோயில்களில் இம்மரபு (துலுக்க நாய்ச்சியார் வழிபாடு) உண்டு என்கிறார் ஹரிராவ்.21 இக்கருத்து ஏற்புடையதாகவே தோன்றுகிறது. அழகர்கோயிலும் முசுலிம் படையெடுப்பினால் ஒருமுறை பாதிக்கப்பட்ட செய்தியை. +1757ல் ஹைதர்அலி மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களைக் கொள்ளையடித்து, அழகர்கோயில் கலியாண மஹாலில் உள்ள விக்கிரகங்களை உடைத்துக் கோயிலில் இருந்த ஏராளமான பணத்தையும் சொத்தையும் கைப்பற்றிக்கொண்டான் என்று இக்கோயில் வரலாறு கூறுவதால்,22 ஹரிராவின் கருத்து பொருத்தமாகவே தோன்றுகிறது. துலுக்க நாய்ச்சியார் கதை நம்மை மற்றுமொரு வகையிலும் சிந்திக்கத் தூண்டுகிறது. முசுலிம் படையெடுப்புக்க ஓய்ந்த பின்னரும் தமிழகத்தில் முசுலிம்கள் இருந்தனர். வலிய எதிரியை உறவு கொண்டாடி வளைத்துக்கொண்டு செயலற்றவனாக்குவது சொத்துடைமைச் சமுதாயத்தில் இயல்பாகப் படிந்துள்ள ஒரு பண் பாகும். இதைத் 'தத்துவ வெற்றி' (ideological victory) என்றும் சிலர் வாதிடக்கூடும். துலுக்கநாய்ச்சியர் கதை வழியாகத் தெய் வீகச் சாமிலுடன் கூடிய ஓர் உறவு முறையினைக் கற்பித்துக் கொண்டு, வலிமையான எதிரிகளான முசுலிப் களின் பகையுணர்ச் சியினைத் தமிழ்நாட்டு வைணவம் மழுங்கச்செய்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நடைமுறைக் கண்ணோட்டத்தில், சொத்துடைமை கோயில்களின் நிறுவனங்களான சொத்துக்களைப் பாதுகாக்கு முயற்சியே இது எனலாம் முசுலிம்கள் ஆட்சியைத் தமிழகத்தில் முடித்துவைத்தவர்கள் நாயக்க மன்னர்களேயாவர். எனவே முசுலிம்களுக்கும் தெலுங்கு மொழி பேசுபவர்களுக்கும் பகைமை உணர்ச்சி ஏற்படுவது இயல்பே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/158&oldid=1468027" இலிருந்து மீள்விக்கப்பட்டது