பக்கம்:அழகர் கோயில்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அழகர்கோயிலின் அமைப்பு 11 சியம், லட்சுமண களஞ்சியம்" எனப்படும் இரண்டு பெரிய கட்டிடங்கள் உள்ளன. இப்பொழுது நீர்த்தொட்டிகளாகப் பயன்படும் இவற்றில் முற்காலத்தில் தானியங்களைக் கொட்டிவைப்பார்கள் எனத் தெரி கிறது. அதற்கு மேற்கே ஒரு மண்டபம் உள்ளது. அதனையடுத்துக் கோயில் அலுவலகம் உள்ளது. 1.6. தொண்டைமான் கோபுரம், சுந்தரபாண்டியன் மண்டபம் : திருக்கலியாண மண்டத்தினையடுத்து மேற்கே தொண்டைமான் கோபுர வாசல்.உள்ளது. இவ்வாசலில் கல்லினால் ஆன இரண்டு துவாரபாலகர் உருவங்கள் உள்ளன. மதிலோடுகூடிய இக்கோபுரம். 'தொண்டைமான் கோபுரம்' என வழங்கப்படுகிறது. இக்கோபுரச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டால் இதனைச் செழுவத்தூர் காலிங்கராயர் மகனான தொண்டைமானார் என்பவர் கட்டிய செய்தி தெரிய வரு கின்றது. இக்கோபுர வாசல் வழியே கோயிலுக்குள் நுழைந்தால், வலப்புறத்தில் உயரமாக அமைக்கப்பட்ட ஒரு மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டால் மண்டபத்தைச் சுந்தரபாண்டியன் கட்டினானென்றும் இதற்குப் பொன்மேய்ந்த பெருமாள் மண்டபம்' என்பது பெயர் என்றும் தெரிய வருகின்றது1. இம்மண்டபத்தின் வடபுறத்தில் கிருஷ்ணர் சன்னிதி உள்ளது. உயரமான மண்டபத்திலிருப்பதால் இதற்கு *மேட்டுக்கிருஷ்ணன் கோயில்' என்ற பெயர் வழங்கப்படுகிறது. 1.7. படியேற்ற மண்டபம் : இம் தொண்டைமான் கோபுர வாசலிலிருந்து நேராகச் சென்றால் கொடிக் கம்பத்தையடுத்துள்ள ஆரியன் மண்டபத்தையடையலாம். இம்மண்டபமும் மிக உயரமானதே. சிற்பத்திறன் மிகுந்த இரு யாளிகள் இம்மண்டபத்தின் தூண்களில் உள்ளன. உயரமாக இருப் பதனால் இதற்குப் 'படியேற்ற மண்டபம்' என்றும் பெயர் வழங்கப் படுகிறது. இம்மண்டபத்திலுள்ள ஒரு கல்வெட்டால் தோமராசய்யன் மகனான ராகவராஜா என்பவன் இம்மண்டபத்தைக் கட்டிய செய்தியை அறியலாம்5. 1.8.மகரமண்டபம் : படியேற்ற மண்டபத்தைந் தாண்டிச் சென்றால் இக்கோயிலின், மகாமண்டபமான முனையதரையன் திருமண்டபத்தை அடையலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/18&oldid=1467873" இலிருந்து மீள்விக்கப்பட்டது