பக்கம்:அழகர் கோயில்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புறக் கூறுகள் வையல்ல என்கிறார்.4 எனவே சமூக ஆய்வுகள் 191 நாட்டுப்புறக் கூறுகளை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். தமிழகத்தின் தென்பகுதியில் மிகப்பெரியதான சித்திரைத் திருவிழாவில் வெளிப் படும் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்வதும் மிக இன்றியமையாததாகும். தன்னுடைய உலக அனுபவமின்மையைக் குறிப்பதற்கு 'ஆற்றைக் கண்டேனா அழகரைச் சேவிச்சேனா' என்று மதுரை, முகவை மாவட்டங்களில் நாட்டுப்புற மக்கள் கூறுவது வழக்கம். அழகர் ஆற்றிலிறங்கிக் காட்சிதரும் சித்திரைத் திருவிழா பல வகைப்பட்ட பண்பாட்டுக் கூறுகளையும் ஓரிடத்தில் காட்டவல்லது என்பதே இவ்வழக்கின் சுருந்தாகும். இத்திருவிழாவினைக் காணும் ஒருவன், பலதரப்பட்ட மக்களின் பழக்கவழக்கங்களையும் தெரிந்து கொள்ளமுடியும் என்ற உண்மை இவ்வழக்குமரபில் வெளிப்படுத்தப் படுகிறது எடுத்துக்காட்டாக மண்டைத்தாலி, பொட்டுத்தாலி, சிறுதாலி, காரைக்கயிற்றுந்தாலி, பஞ்சாரத்தாலி, பார்ப்பாரத்தாலி எனப் பல்வேறு வகையான தாலிகளை அணிந்த தென்மாவட்டங் களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதிய பெண்களை இத்திரு விழாவில் காணலாம். தலையில் பூச்சூடாமல் தாலியில் பூச்சூட்டும் வழக்கமுடையவர்களையும் காணலாம். புடைவைக்கட்டிலிருந்து தலைமுடியினை அள்ளிச்செருகுவது வரை பல்வேறு வகையான பழக்கமுடைய மக்களைக் காணலாம். இவர்களனைவரும் நாட்டுப் புறங்களைச் சேர்த்த மக்களே. எனவே இத்திருவிழாவினைக் காணு வதால் தமிழ்நாட்டின் தென்பகுதிக் கிராமங்களைச் சுற்றிப்பார்த்த அனுபவத்தை ஒருவர் பெற இயலும். இதனைக் கருதியே மேற் குறித்த சொல்வழக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் எனக் கருதலாம். 9.3. சித்திரைத் திருவிழா-இரு பிரிவுகள் : சித்திரைத் திருவிழா என்ற பெயர் ஒரே தேரத்தில் நடை கோயில் திருவிழாவினையும் பெறும் மதுரை மீனாட்சியம்மன் அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழாவினையும் குறிக்கிறது. குறிப் பீட்டுச் சொல்வதானால் அழகர் ஊர்வலம் மூன்றாம் திருநாளன்று இரவு அழகர்கோயிலிலிருந்து புறப்படுகிறது. அதே நாளில் மதுரை கடைசி நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவின் தேரோட்டம் நடைபெறுகிறது. நான்காம் திருநாளன்று இரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/198&oldid=1468071" இலிருந்து மீள்விக்கப்பட்டது