பக்கம்:அழகர் கோயில்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புறக் கூறுகள் 9 10. சாதி ஆசாரங்கள் - அணிகள் : 205 சாதிக்கென்றேயுரிய தனித்த ஆசாரங்கள் சமூக மாற்றத்தின் பகுதியான இந்நாளில் - வேகமாக மறைந்துவருகின்றன. மதுரை முகவை மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்களே பெருவாரி யாகக் கலந்துகொள்வதால் சித்திரைத் திருவிழாவில் சாதி ஆசாரங்களை இன்றளவும் பின்பற்றும் நாட்டுப்புறமக்களைத் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக், 'ஆண்கள் கொண்டையிட்டுக் காதுகளில் வண்டிக்கடுக்கன் அணிந்திருப்பின் அவர்கள் அம்பலப் பட்டமு டைய மேலநாட்டுக்கள்ளர் சாதியினர்; தலைப்பாகையோடு கையில் பெரிய கம்போடு காதுகளில் வாழைப்பூச்கடுக்கன் அணிந்திருப்பின் அவர்கள் இடையர்கள். வாழைப்பூக்கடுக்கன் 'ஏறத்தாழ 1]" (அங்குல) நீளத்தில் நீள் செவ்வக வடிவத்தில் அமைந்த காது வளைய்மாகும். பெண்கள் மேற்காதில் அணிகின்ற முருகு என்னும் காதணியை ஒரு காதில் மட்டும் அணிந்துவரும் ஆண்கள் பெறமலைக்கள்ளர் சாதியினர்; கையில் பூண்பூட்டிய சிறு பிரம்பு வாழைப்பூக்கடுக்கன் போன்ற ஆனால் சன்னமான நான்கைந்து கம்பிகளின் தொகுப்பாக அமைந்த கடுக்கனை அணிந்திருப்பவர்கள் கோயில் பூசாரிகள் ஆவர். சாமியாடிகள் கையில் வெள்ளிக்காப்பு அல்லது கனத்த 'வளையல் போன்ற 'கடயம்'. அணிந்து வரு கின்றனர். கடயத்தை விரல்களின் வழியேதான் அணியவும் கழற்றவும் முடியும். காப்பில் நடுவில் பிளப்பதற்குச் சுரையும் திருகாணியும் வைக்கப்பெற்றிருக்கும். எனவே வீரல்களின் வழியே அணியாமல் பிளந்தவண்ணம் முன்கையில் பூட்டித் திருகாணியைத் திருகிச் சேர்த்துவிடலாம். 'காதுக்கு ஐந்து நகை' என்பது நாட்டுப்புற வழக்கு, இதற்கேற்ப காதில் தண்டட்டி, ஒன்னப்பூ, குகுட்டுத்தட்டு. கர்ணப்பூ, கொப்பு ஆகிய ஐந்து நகைகளையும் அணிந்த பெண்களை ஏராளமாகக் கானமுடியும் பள்ளர், பறையர் சாதி. களைச் சேர்ந்த பெண்கள் காதின் வெளிமடலின் தடுப்பகுதியில் அணியப்பெறும் கர்ணப்பூவினை ஆண்டாள் இதனைத் திருப்பாவையில் (27) குறிப்பர்) அணிவதில்லை அதற்குப் பதிலாக இலை போன்ற அல்லது கவிழ்ந்த குமிழ் ('செவிப்பூ' என போன்ற ஓரணியினை அணிகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/212&oldid=1468086" இலிருந்து மீள்விக்கப்பட்டது