பக்கம்:அழகர் கோயில்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

204 அழகர்லோயில் ஆடித்திருவிழா உழவு வேலைகள் தொடங்குகின்ற நேரத்திலும் சித்திரைத் திருவிழா விஉளத்தவற்றை அறுவடை செய்துவிட்டு உழவுத்தொழிலில் ஈடுபட்டோர் ஓய்வுபெறும் நேரத்திலும் நடை பெறுகின்றன. உழவுத்தொழில் செய்வோர் இறைவனை நினைக்கும் தேளையும் அல்லது ஓய்வும் கொண்ட திருவிழாக் காலங்கள் இளையாகும். கோயில் அலுவலகத்தாரி கக்கின்படி இதே பசலி ஆண்டில் (1.7.1978-30.6.1979) இக்கோயிலுக்குக் காணிக்கையாக அந்த கால்நடைகளின் எண்ணிக்கை 751 ஆகும் " இரண்டு எருமைகள் தவிர மற்றவை பசுக்களும், பசுங்கன்றுகளும், கானகளுமாகும். இவற்றையும் கோயில் ஏலத்தில் விற்பனை செய்துக்டுகிறது 9.9. பண்பாட்டுக் கூறுகள்: இரண்டு, மூன்று, நான்காம் திருவிழா நாட்களில் அழகரி கோயில் வெளிக்கோட்டைப் பகுதியில் மரங்களினடியில் நாட்டுப் புற மக்கள் தங்கள் மாட்டுவண்டிகளை நிறுத்துகின்றனர் ரினெட் டாம்படிச் சன்னீதியில் ஆடுவெட்டுதல் சட்டரீதியாகத் தடைசெய்யப் பட்டிருப்பதால், தங்கள் வண்டிகளின் கீழேயே ஆடுகளை வேட்டி வீடுகின்றனர். கற்களால் அடுப்புமூட்டி அங்கேயே ஆட்டுக்கூறியி ளைச் சமைத்து உண்கின்றனர். மிஞ்சிய கறி, உப்புத்துண்டமாக மரங்கள்தோறும் கயிற்றில் கட்டி உலரவைக்கப்படுகிறது. கறித் துண்டுகள் உலரும் இந்த இடத்தைத் தாண்டியே கர்வலம் மதுரையை தோககிச் செல்கிறது. கடுமையான தண்ணீர் பற்றாக்குறை இருந்தும் வண்டி கட்டிக்கொண்டு வருவோர் அழகர் கோயிலில் ஓர் இரவேனும் தங்குகின்றனர். பக்தி உணர்வோடு சுற்றுலா உணர்வும் இம்மக்களிடம் நிறைந்து காணப்படுகிறது. வண்டியின் கீழ்ப்பகுதியிலோ உட்புறத்திலோ குழந்தைகட்குத் தொட்டிலைக் கட்டிக்கொள்கின்றனர். வண்டியின்கீழ் வைக்கோலைப் பரப்பி அல்லது சாக்கினை விரித்துப் படுத்துக்கொள்கின்றனர். அழகரின் எளிமையினையும் ஏழ்மையினையும் வெளிக்காட்டும் வாழ்க்கை இவர்களிடம் தெரிகிறது. இவ்வகையான மக்களே சித்திரைத் திருவிழாவுக்கு உயிர்ப்பு ஊட்டுகின்றனர் திருவிழாக் கூட்டத்தில் எங்கும் நிறைந்திருக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/211&oldid=1468085" இலிருந்து மீள்விக்கப்பட்டது