பக்கம்:அழகர் கோயில்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிற் பணியாளர்கள் 225 அது ஆகமநெறி அல்லாத ஒன்றாயினும் அதனைக் கோயில் நடை முறையில் இணைத்துக்கொண்டிருப்பதாகும். எனவே கதைச்செய்தி, ஒரு சடங்காக மாற்றப்பட்டிருப்பது, தென்கலை வைணவ மரபு அறிந்தவர்க்கு வியப்பான செய்தி இல்லை. கதையிள் உள்ளடக்கம், திருமாலின் எளிவந்த தன்மையி னையும் (சௌலப்யம்), இறையருள் உயர் சாதியினருக்கு மட்டு மன்றி, எல்லோர்க்கும் உண்டு எனும் கருத்தினையும் விளக்குகிறது. சாதிவேறுபாடுகளைக் கடந்த நிலைமையைத் தமிழ்நாட்டு வைணவம் இராமானுசர் காலத்திலேயே அடைத்துவிட்டது. எனவே அதனை வலியுறுத்தப் பிறந்த கதை என்பதனைவிட இறைவனின் எளிவந்த தன்மையினைப் புலப்படுத்தும் கதையென்றே இதனைக் கொள்ள லாம். வேறு வகையான சமூக அழுத்தங்கள் காரணமாக இக்கதை பிறந்திருக்கலாமெனக் கொள்ளமுடியவில்லை. குறிப்புகள் 1.ஸ்ரீனிவாச ஐயங்கார், திருமலை அழகர்கோயில், நாள்: 11.8.78. நம்பிகள் நிருவாகத்தார். 2. திருமாலிருஞ்சோலைமலை ஸன்னதி வகையறா தொழில்,/ சுதந்திர அட்டவணை, (28.6.1803), 1937, பார்க்க: பிற் சேர்க்கை எண் 11 : 3, 3. A. R. E. of 1932, 4. K.N. Radhakrishna, Thirumalirunjolaimalai (Alagarkoil) Sthalapurana, p. 107. 5. A. R. E. 286 of 1930. 6. பட்டயநகல் ஓலை, பார்க்க : பிற்சேர்க்கை எண் III : 5, வரிகள் 13-14. 7. தொழில், சுதந்திர அட்டவணை, மு. நூல், ப, 1. 8. Original suit No. 87-91 of 1939. In the Court of Principle Subordinate Judge of Madurai, Judgement dated 21.2.1940. 9. தகவல்: ராகவையங்கார், அழகர்கோயில், பணியாளர் பற்றிய பிற செய்திகளையும் முதலில் தந்துதவியர் இவரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/232&oldid=1468107" இலிருந்து மீள்விக்கப்பட்டது