பக்கம்:அழகர் கோயில்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பசாமி 241 குடிக்கருகில் 'கரியமாணிக்கம்' என்பது ஓர் ஊர்ப்பெயராக வழங்கி வருகிறது. இக்காலத்தில் காரி என்னும் பெயர், மக்கட்பெயர் வழக்கில் காணப்படவில்லை. கரியமாணிக்கம் என்ற பெயர்வழக்கு ஒருசில இடங்களில் காணப்படுகிறது. கருப்பன் என்ற பெயரே பெரிய கருப்பன், முத்துக்கருப்பன், நல்லகருப்பன் ஆகிய முன்னொட்டுக் களோடும், கருப்பசாமி என்றும் வழங்கிவருகிறது. வெள்ளைச்சாமி என்ற பெயர் கண்ணனுக்கு மூத்தவனான பலராமனைக் குறிக்கும். வாசுதேவ கிருஷ்ணன் என வடமொழியிலும், காரி எனத் தமிழிலக் கியங்களிலும் குறிக்கப்பெறுபவனும், வெள்ளைச்சாமியின் தம்பியாகிய கருப்பசாமியும் ஒருவனே என்று கருதலாம். 'அண்ணன்மார்சாமி கதை' என்ற கதைப்பாடல், மாயவன் (திருமால்) கடல் கடைந்தபோது கருப்பசாமி பிறந்ததாகக் கூறி கருப்பசாமியின் பிறப்பினைத் திருமாலோடு தொடர்புபடுத்துகிறது. 16 மதுரை வட்டாரத்தில் காணப்பெறும் கருப்பசாமியின் சிலைகள் அனைத்தும் தென்கலை வைணவத் திருநாமத்துடன், சார்பு பெற்றிருப்பதும் இக்கருத்தினை வலியுறுத்துகின்றது. வைணவச் இந்தப் பின்னணியில்தான். திருடர்கள் உடல் புதைக்கப் பட்ட கோபுரவாசலில் தீயஆவிகளை விரட்டவுப, மக்களின் அச்சத்தை நீக்கவும் ஒரு சிறுதெய்வத்தை நிலைப்படுத்த (பிரதிஷ்டை செய்ய வேண்டிய நிலைமை அழகர்கோயிலில் ஏற்பட்டபோது, அது பிற இடங்களில் தென்கலை வைணவத் திருநாமத்துடன் காட்சிதகும் கருப்பசாமியாக அமைந்தது. 11.14. கருப்பசாமியும் உயர்சாதியினரும்: சிறுதெய்வமாக நிலைப்படுத்தப்பட்ட கருப்பசாமியை அழகர் கோயில் பணியாளரான உயர்சாதிப் பிராமணர்களும் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் நாள்தோறும் அர்த்த சாமப்பூசையில் கோயில் இறைவனுக்குப் படைத்த உணவினையும். அணிவித்த மாலையினையும், கருப்பசாமிக்குக் கொண்டுவந்து படைக்கவும் பிராமணப் பணியாளர் ஒத்துக்கொண்டுள்ளனர். 60 நடைமுறையில் கோயிலுக்கும். கருப்பசாமி சன்னிதிக்குமுள்ள ஒரே தொடர்பு இதுதான். தமிழ்நாட்டு வைணவ வரலாற்றைக் கூர்ந்துநோக்கும்போது, கோயிற் பணியாளரான வைணவப் பிரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/248&oldid=1468122" இலிருந்து மீள்விக்கப்பட்டது