பக்கம்:அழகர் கோயில்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுபடை வீடுகளும் பழமுதிர்சோலையும் 259 'பழமுதிர்சோலை' எனும் பெயரிய நூலின் கருத்துக்கள் ஆய்வு முடிவுகள் என்றோ, உண்மை கண்டறியும் முயற்சி என்றோ ஏற்கப்படவியலாதவை. இருப்பினும் அவற்றைத் திறனாய்தல் தமது கடமையே. தாண்டவமூர்த்தி ஓதுவார் என்பாரசல், 'குமரகுருபரன்' இதழில் (1953), 'கல்லழகர்' என்னும் தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை, ‘அழகர்கோயிலைப் பற்றிய ஆராய்ச்சிக்குறிப்பு' என் னும் தலைப்போடு இந்நூலில் (1961) பிற்சேர்க்கையாகத் தாப் பட்டுள்ளது. இந்நூல் தரும் கருத்துக்களை இனி நோக்குவோம் : 1. "அழகர்கோளிலிலுள்ள மூலவாண்டவர்க்குக் கல்லழகர் என் பது திருநாமம். மலையலங்காான் என்ற நாமம் அதைப் பின்பற்றி அமைந்தது. கள்ளர் நாட்டிலிருப்பதால் கள்ளழகர் என்றும் வழங்கி வருகிறது. புராதன ரிக்கார்டுகளில் கள்ளழகர் என்று இருந்து வருகிறது. மூலாண்டர் உட்புறம் கல்லாக ரமாகச் சங்கு சக்கர மின்றி இருந்ததைத் பிற்காலம் அரிகேசரி பாண்டியன் னால் சாந்தாகாரம் ஆக்கிப் பிரயோக சுக்கிரதாரியாக வருகிறார்" (ப.78). என்பவ விளங்கி கல்லழகர் என்ற பெயருக்கும், பாண்டியன் ஒருவன் சாந்தா காரம் ஆக்கியதற்கும் சான்றுகளைக் கட்டுரையாளர் தரவில்லை. எனவே வரலாற்றுணர்வோடு இவற்றை ஏற்கமுடியாது. கல்லழகர் என்ற பெயரைப் பின்பற்றி மலையலங்காரன் என்ற பெயர் அமைந்ததாகக் கூறுவதும் ஓரு கற்பனையே. அழகர்', 'அலங்காரன்' என்ற இரு சொற்களும் ஒருபொருள் தருவன அல்ல 'மலையலங்காரன்' என்ற பெயர், 'அழகர் அலங் காரன் மலை' என்ற பெரியாழ்வாரின் பாசுரத்தால் அமைந்த தென்று கொள்வதே பொருத்தம். 2. "மேற்படி கோயில் மூலஸ்தானத்திலேயே 'சோலைமலைக் குமரன்' என்ற வெள்ளி விக்ரஹம் இருந்துவருகிறது"(ப. 80). இத்திருமேனியின் பெயர் 'சோலைமலைக்கரசர்' என்பதே சரியான செய்தியாகும். 'ஏறு திருவுடையான்', 'சுந்தரத்தோளுடை யான்' என இக்கோயிலின் பிற திருமேனிகள் பாசுரப் பெயர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/266&oldid=1468143" இலிருந்து மீள்விக்கப்பட்டது